5 ஆம்னி பேருந்துகள்; விஜய்யுடன் சந்திப்பு; கரூரில் கிளம்பிய பலியானவர்களின் குடும...
சண்டையிட்டுச் சென்ற மனைவி; இரு குழந்தைகளைக் கொன்ற தந்தை - பதறிய போலீஸ்
மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் சவான். நேற்று இவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வெளியூருக்கு பயணம் சென்று கொண்டிருந்தார்.
வழியில் கணவன் மனைவி இடையே ஏதோ ஒரு பிரச்னையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், 'நான் உங்களுடன் வரவில்லை, எனது பெற்றோர் வீட்டிற்குச் செல்கிறேன்' என்று சொல்லிவிட்டு ராகுல் சவானின் மனைவி சென்றுவிட்டார். இரண்டு மகள்களுடன் தனிமையில் நின்ற ராகுல் சவான் அக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு தொடர்ந்து பயணமானார்.

அவர் புல்தானா மாவட்டத்தில் உள்ள அஞ்சர்வாடி என்ற கிராமத்தில் இருக்கும் வனப்பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றார். அங்கு இரண்டு குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். பின்னர் நேராக அங்குள்ள் காவல் நிலையத்திற்குச் சென்று, தன் இரண்டு மகள்களையும் கொலை செய்துவிட்டேன் என்று கூறி சரணடைந்துவிட்டார். போலீஸார் உடனே விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு குழந்தைகளின் உடல்களும் பாதி எரிந்த நிலையில் இருந்தது. இதனால் குழந்தைகளை கொலை செய்த பிறகு தடயங்களை அழிக்க உடல்களை எரிக்க முயன்றாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளும் இரண்டு வயதாகிறது. ராகுல் சவானை கைது செய்து உண்மையில் என்ன காரணத்திற்காக குழந்தைகளைக் கொலை செய்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



















