Attagasam: ``ஏமாற்றமளிக்கிறது; தல விரும்பிகளின் நலம் விரும்பியாக நான்..." - இயக்...
`விஜய்யை அதிமுக கூட்டணிக்கு அழைக்கவில்லை; ஆனால் வந்தால் வரவேற்போம்!'- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியதாவது, “எடப்பாடி பழனிசாமி கூறும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதை செய்தால் இந்த அரசை நாங்கள் பாராட்டுவோம். அதை விடுத்துவிட்டு விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தால் இந்த அரசுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள். தீபாவளிக்கு தமிழகத்தில் 750 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றுள்ளது, இது தமிழகத்தின் சாபக்கேடு. விஜய் கரூருக்கு சென்றால் மீண்டும் எதும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் செல்லவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடியோக்களில் பேசி துக்கம் விசாரித்து விட்டார். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நிச்சயமாக விஜய்க்கு தெரிந்து நடந்தது கிடையாது. இதில் ஏற்பட்டுள்ள சதிகள் எல்லாம் விசாரிப்பதற்கு தான் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் குடும்பத்தை நேரில் வரவழைத்துள்ளார். விஜய்க்கு உள்ள மாஸ் ஓட்டாக மாற வேண்டும் என்று சொன்னால் பயிற்சியுள்ள பயிற்சியாளர்கள் தேவை. அந்த பயிற்சியாளர்கள் தான் அ.தி.மு.க-வினர். அ.தி.மு.க கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கு நல்லது. வரவில்லை என்று சொன்னாலும் அ.தி.மு.க-விற்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த முறை நிச்சயமாக அ.தி.மு.க ஆட்சி தான் வரப்போகிறது.

விஜய் கூட்டணிக்கு வந்தால் 250 சீட்டு அ.தி.மு.க வெற்றி பெறும். வரவில்லை என்றால் 180 சீட் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். விஜய் அ.தி.மு.க உடன் கூட்டணிக்கு வருவது அவரது எதிர்காலத்திற்கு, அவரது பாதுகாப்பிற்கு நல்லது. விஜய் நல்ல முடிவு எடுப்பார் என நினைக்கிறேன். ஆனால் நாங்கள் விஜய்யை அழைக்கவில்லை வந்தால் வரவேற்போம். மக்கள் பா.ஜ.க - அ.தி.மு.க விஜய் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேருங்கள் என கிராமத்தில் பேசுகிறார்கள்” என்றார்.
















