Idly Kadai BTS: ``சாணம் படிந்த கையோடு தேசிய விருது..." - நித்யா மெனேன் நெகிழ்ச்ச...
கரூர் கூட்ட நெரிசல் பலி: நீதிமன்றத்தில் சிபிஐ ஆவணங்கள் தாக்கல் - நகல் கேட்டு தவெக-வினர் மனு!
கரூரில் கடந்த மாதம் 27 - ம் தேதி வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வெளியான சம்பவம் தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ (CBI) அதிகாரிகள் கடந்த 16 - ம் தேதி இரவே விசாரணையை துவங்கினர். இதற்காக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ ஏ.எஸ்.பி முகேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் முகாமிட்டு, விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, கரூரில் கடந்த ஒரு வார காலமாக முகாமிட்டிருந்த சிறப்பு புலனாய்வு குழு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான விசாரணை குழுவினர், சி.பி.ஐ வசம் அதுவரை தங்கள் மேற்கொண்ட விசாரணை தொடர்பான ஆவணங்கள்/ ஆதாரங்கள் அனைத்தையும் ஒப்படைத்தனர். இதில், முதல் கட்டமாக, சி.பி.ஐ சார்பில் கரூர் சி.ஜே.எம் -1 நீதிமன்றத்தில் கடந்த 23- ம் தேதி சீல் வைக்கப்பட்ட கவர் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனை சி.ஜே.எம்- 1 நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.பரத்குமார் மூன்று நாள் விடுமுறையில் இருந்ததால் , சி.ஜே.எம்-2 நீதிமன்ற நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் அவர்களிடம் சி.பி.ஐ அதிகாரிகள், கவரை தாக்கல் செய்தனர். அதன்படி, நேற்று கரூர் சி.ஜே.எம் -1 நீதிமன்ற நீதிபதி பரத்குமார் விடுமுறை முடிந்து, வழக்கு பணிகளை மேற்கொண்டார். அப்போது, சி.பி.ஐ தாக்கல் செய்த சீல் இடப்பட்ட கவரில் உள்ள விவரங்கள் குறித்து அறிய, சென்னையிலிருந்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் குழுவினர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில், சி.பி.ஐ தரப்பு கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கவரில்,
கடந்த மாதம் 27-ம் தேதி, கரூர் வேலுச்சாமிபுரம் தமிழக வெற்றிக் கழக கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, கடந்த 18 - ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசல் தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ அக்டோபர் 18-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பலர் குற்றவாளிகள் என குறிப்பிட்டு , இந்த தகவல் அறிக்கையை சி.பி.ஐ ஏ.எஸ்.பி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்ள உள்ளார் உள்ளிட்ட விவரங்களை சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இது தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் த.வெ.க தரப்பு வழக்கறிஞர், சி.பி.ஐ தரப்பு தாக்கல் செய்த விவரங்களின் நகல் கோரி கரூர் சி.ஜே.எம்-1 நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராகவும் த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவத்தில் சதி நடந்துள்ளது என டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சி.பி.ஐ விசாரணை கோரியும் மனு தாக்கல் செய்ததன் அடிப்படையில், சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 13 -ம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கையில், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு முன்னர் கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த 27 - ம் தேதி இரவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் த.வெ.க நிர்வாகிகள் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், பவுன்ராஜ், நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். அதன்படி கரூர் நகர போலீஸார் மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அதை வைத்தே சிறப்பு புலனாய்வு குழு, இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்து மதியழகனை மட்டும், காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வந்த நிலையில், சி.பி.ஐ-க்கு விசாரணையை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தவெக கூட்ட நெரிசல் வழக்கில், சி.பி.ஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


















