செய்திகள் :

ஆந்திரா பேருந்து தீ விபத்து: `ஏ.சி. பஸ் என்பதால்’ - கோர விபத்தை விளக்கும் மீட்கப்பட்ட பயணிகள்

post image

தேசிய நெடுஞ்சாலை 44-ல் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து ஒன்று கர்னூல் பகுதியில் பைக் மீது மோதியதில் ஏற்பட்ட திடீர் விபத்தால், பேருந்து முழுமையாகத் தீ பற்றி எரிந்துள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 25 பயணிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பேருந்தில் மொத்தம் 40 பயணிகள் பயணம் செய்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.

பெரும்பாலான பயணிகள் நல்ல தூக்கத்தில் இருந்ததால் தீ பிடித்ததை தாமதமாக கவனித்து தப்பிக்க முயல்வதற்குள் இந்த கோர சம்பவம் நடந்திருக்கிறது. ஏசி பேருந்து என்பதால் பயணிகள் உடனடியாக வெளியே செல்ல முடியவில்லை. தீ விபத்தை உணர்ந்த 20 பயணிகள் ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பியிருக்கின்றனர்.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியிலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பாதிக்கப்பட்டு காயங்களுடன் தப்பிய பயணிகள் பேசுகையில், "ஏசி சிலீப்பர் பஸ் என்பதால் திரைகளைப் போட்டு மூடிக்கொண்டு பயணிகள் எல்லோரும் ஆழ்ந்து படுத்து தூங்கிவிட்டனர். பைக் ஒன்று பஸ் மீது மோதி, பஸுக்கு அடியில் சிக்கிக் கொண்டது. அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் தீ பிடித்து பஸ் எரிய ஆரம்பித்துவிட்டது. தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தாமதமாகத் தான் தீ பிடித்ததை அறிந்து கொண்டனர்.

ஏசி பஸ் என்பதால் ஜன்னல் முழுமையாக மூடப்பட்டிருந்தது. அதனால், ஜன்னல்களை உடைத்து வெளியேறுவதற்குள் உயிரிழப்புகளும், பாதிப்புகள் அதிகமாகிவிட்டன. அவசர வழிக் கதவும் திறக்கமுடியாமல் போனதால் வெளியேற முடியாமல் பெரும் பாதிப்பிற்குள்ளாகிவிட்டோம்" என்று கூறியிருக்கின்றனர்.

ஆந்திரா: அதிகாலையில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து - 15 பேர் பலி; பயணிகளின் நிலை என்ன?

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் கர்னூலில் இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது.ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது ம... மேலும் பார்க்க

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்– உணவருந்தியபோதே தாய், மகள் உயிரிழந்த சோகம்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், கடந்த 16-ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுச... மேலும் பார்க்க

மும்பை: 12 மாடி கட்டிடத்தில் தீ விபத்து; 5 பேர் பலி, 10 பேருக்கு தீவிர சிகிச்சை -நள்ளிரவில் சோகம்

மும்பை அருகிலுள்ள நவிமும்பை வாஷி பகுதியில் செக்டர் 14-ல் இருக்கும் ரஹஜா ரெசிடென்சி அடுக்குமாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் 10வது மாடியில் வசிக்கும் கமலா ஜெயின் வ... மேலும் பார்க்க

வங்காளதேசம்: டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவைகள் பாதிப்பால் பயணிகள் அவதி!

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் கார்கோ முனையத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சரியாக பிற்பகல் 2:30 மணியளவில்... மேலும் பார்க்க

`வானமே இடிஞ்சு விழுந்த மாதிரி இருந்துச்சி’ - கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த சூழலில் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்ன நடந்தது?

ஜெய்சல்மாரில் நடந்த கொடூர விபத்தினால் பேருந்தில் இருந்த 20 பேர் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதியம் 3 மணியளவில் ஜெய்சல்மாரிலிருந்து ஜோத்பூர் புறப்பட்ட ப... மேலும் பார்க்க