செய்திகள் :

போதைப்பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ED சம்மன்; பின்னணி என்ன?

post image

தமிழ்த் திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா மீதான போதைப்பொருள் வழக்கில் அமலாக்கத்துறை (ED) தற்போது இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இருவரும் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இருவரும் சில வாரங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நிபந்தனை ஜாமீன் பெற்று வெளிவந்தனர்.

ஸ்ரீகந்த் வழக்கு
ஸ்ரீகாந்த் வழக்கு

இதற்கிடையில், இருவரின் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துகள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. போதைப் பொருள் நிதி வெளிநாட்டுக்குச் சென்றதா எனும் கோணத்திலும் சோதனை நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமலாக்கத்துறை (ED) தற்போது ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. வெளியான தகவலின்படி, ஸ்ரீகாந்த் வருகிற அக்டோபர் 28ஆம் தேதியும், கிருஷ்ணா அக்டோபர் 29ஆம் தேதியும் அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பளத்தில் பாலின பாகுபாடு: `மார்கெட் வேல்யூ என்னவோ அதைக் கேளுங்கள்' - பிரியாமணி

இந்திய சினிமாவில் சம்பள விவகாரத்தில் பாலின பாகுபாடு எப்போதும் விவாதப்பொருளாக இருக்கிறது.குறிப்பாக ஒரு படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் இடையேயான சம்பள வித்தியாசம் என்பது மலைக... மேலும் பார்க்க

இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: “ரஹ்மான் வெளியூர் போனா சபேஷைத்தான் இசையமைக்க கூப்பிடுவாங்க" - பாக்யராஜ்

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் நேற்று (அக்டோபர் 23) காலமானார்.இசையமைப்பாளரான இவர் தன் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசை... மேலும் பார்க்க

"திரையுலக பஞ்ச பாண்டவர்களில் ஒருவரை இழந்துட்டோம்" - ஆர்.வி.உதயகுமார், பேரரசு இரங்கல்

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார்.சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல... மேலும் பார்க்க

சபேஷ் மறைவு: ``அப்பாவ பார்க்கவே முடியல, ரொம்ப ஒடஞ்சிட்டாரு" - ஶ்ரீகாந்த் தேவா

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார்.சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல் அஞ்சலி செலுத்த... மேலும் பார்க்க

'என் கனவு நிஜமாகிவிட்டது'- இயக்குநராகும் கென் கருணாஸ்; தொடங்கியப் படப்பிடிப்பு

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் 'அசுரன், விடுதலை 2, வாத்தி' போன்ற படங்களில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். த... மேலும் பார்க்க