செய்திகள் :

SIR: `தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்’ - தேர்தல் ஆணையம்

post image

தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை தி.நகர் தொகுதியில், வாக்குச் சாவடி அதிகாரிகளாக உள்ள திமுகவினர், ஆளுங்கட்சிக்கு சாதகமாக, 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் ஆணையம்

அந்த மனுவில், 1998 ம் ஆண்டு தி.நகர் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 349 வாக்காளர்கள் இருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2021 ம் ஆண்டு வெறும் 36 ஆயிரத்து 656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர். மக்கள்தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், தொகுதியில் அதிமுக ஆதரவாளர்கள் 13 ஆயிரம் பேரில் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து, தவறான சேர்க்கை, நீக்கத்தை களைந்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தி.நகர் தொகுதியில் மொத்தமாக வாக்காளர்கள் சேர்க்கையும், நீக்கமும் நடந்துள்ளதால், அவற்றை சரிபார்த்து திருத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதுசம்பந்தமாக தமிழில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பீகாரைப் போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், அடுத்த வாரம் துவங்க உள்ளது. அப்போது, மனுதாரர் தெரிவித்த புகார்கள் கவனிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பீகார் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

`ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் B டீம்தான்’ - புதுச்சேரி அரசியல் நகர்வுகளை விவரிக்கும் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை... மேலும் பார்க்க

திண்டுக்கல்: புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநராக இருப்பவர் செல்வசேகர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ள வாடகை வீட... மேலும் பார்க்க

`உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ - Silicon Valley-யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா?

'அடுத்த தலைமுறை போர்கள் துப்பாக்கிகளாலோ, ஏவுகணைகளாலோ இருக்காது. சைபர் தாக்குதல்களும், பயோ-வெப்பன்களும் பயன்படுத்தப்படும்' எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்காவுக்கு எதிர... மேலும் பார்க்க

”நெல் மூட்டை மழையில் நனைந்து முளைத்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுகிறார்” - உதயநிதி காட்டம்

நெல் கொள்முதல் பணிகள் விரைவாக நடக்காததால் கொள்முதல் நிலையங்களிலும், சாலையோரங்களில் நெல்லை கொட்டிவைத்து நாள்கணக்கில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பெய்த மழையால் பல இடங்களில் ந... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: “வயித்தெரிச்சல்ல இருக்கோம்; யார் பொய் சொல்றா?”- உதயநிதி குறிப்பிட்ட பெண் விவசாயி குமுறல்

நெல் கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தால் அறுவடை செய்த நெல் மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் தொடர் மழையில் நனைந்ததில் முளைத்து சேதமடைந்ததாக டெல்டா விவசாயிகள் கூறி வந்தனர். இதையடுத்து கடந்த 22ம் ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: ”விஜய்கோ, தவெக கட்சியினருக்கோ போதிய அரசியல் அனுபவம் இல்லை” – வைகோ

நண்பரின் மனைவி மறைவுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல் வந்திருந்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை நாங்கள் வரவேற்... மேலும் பார்க்க