`கருப்பு பட அப்டேட்; மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' -ஆ...
'அழகிய பாரிஸ் தெருக்களில் என் அம்மாவோடு...'- மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி
நடிகை மாளவிகா மோகனன் 'தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து மோகன் லாலுக்கு ஜோடியாக ‘ஹ்ருதயபூர்வம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்தார்.
இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து 'வால்டர் வீரய்யா’ படத்தை இயக்கிய பாபியின் இயக்கத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் மாளவிகா மோகன் தன் அம்மாவை பாரிஸ் அழைத்துச் சென்றது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "நான் எப்போதும் அம்மாவை பாரிஸ் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
அந்த நகரத்தின் வரலாறு, கலை, அமைதியான அழகை நேரில் பார்க்க வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.
நாங்கள் சின்ன சின்ன தெருக்களைச் சுற்றி வந்தோம். காபி ஷாப்பில் நேரத்தைக் கழித்தோம்.
பாரிஸ் நகரம் தந்த அந்த அழகிய உணர்வில் மூழ்கினோம். என் பெற்றோர்களுக்கு இந்த உலகத்தைச் சுற்றி காண்பிக்க நினைக்கிறேன்.
என்னையும், சகோதரரையும் அப்பா நிறைய இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அதுதான் இன்று எங்களை செதுக்கி இருக்கிறது. எங்கள் பெற்றோர் எங்களுக்கு செய்ததை நாங்கள் அவர்களுக்கு செய்ய நினைக்கிறோம்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.















