செய்திகள் :

`வெடிக்கும் பைசன்; துருவ்-ன் மறக்க முடியாத நடிப்பு' - பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன்

post image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'பைசன்' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.

அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மாரி செல்வராஜின் சொந்த அனுபவங்களோடு பின்னப்பட்டு உருவாகியிருக்கிறது 'பைசன்'.

பைசன் காளமாடன்
பைசன் காளமாடன்

சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் திரைப்படமான இப்படத்தை அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

அவ்வகையில் இயக்குநர் வெற்றிமாறன், "உறுதியையும் எதிர்ப்பையும் பிரதிபலிக்கும் ஆழமான தியானம்.

த்ருவ் விக்ரம் அளிக்கும் இயல்பான, மறக்க முடியாத நடிப்பு சக்திவாய்ந்த உவமைகளால் நிறைந்துள்ளது. வலிமை மற்றும் உயிர்வாழ்வின் அடையாளமாக பைசனின் எலும்புக்கூடு, மரியாதைக்கான போராட்டமாக கபடி, தடங்களால் மறைக்கப்பட்ட பாதைகளில் ஓடும் பயணம் அனைத்தும் இடையறாத போராட்டத்தை வெளிப்படுத்துகின்றன.

அமைதியானாலும் வெடிக்கும் பைசன், கிட்டனின் அடக்கி வைத்த கோபத்தை பிரதிபலிக்கிறது; கருப்பு-வெள்ளை மற்றும் நிறம் மாறும் காட்சிகள் இழப்பு, நினைவு, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன." என்று பாராட்டியிருக்கிரார் வெற்றிமாறன்.

"நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த படம் 'பைசன்'; உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி" - வைகோ வாழ்த்து

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'பைசன்' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ்... மேலும் பார்க்க

`கருப்பு பட அப்டேட்; மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' -ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’.இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. 'கட்சி சேர', 'ஆச கூட' போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய்... மேலும் பார்க்க

``எங்கள்ல மொதல்ல கார், வீடு வாங்குன சபேஷ் இன்னைக்கு மொத ஆளா..." - கண்ணீர் விடும் தம்பி முரளி

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார்.சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல... மேலும் பார்க்க

'அழகிய பாரிஸ் தெருக்களில் என் அம்மாவோடு...'- மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி

நடிகை மாளவிகா மோகனன் 'தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து மோகன் லாலுக்கு ஜோடியாக ‘ஹ்ருதயபூர்வம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து 'வால்டர் ... மேலும் பார்க்க

சம்பளத்தில் பாலின பாகுபாடு: `மார்கெட் வேல்யூ என்னவோ அதைக் கேளுங்கள்' - பிரியாமணி

இந்திய சினிமாவில் சம்பள விவகாரத்தில் பாலின பாகுபாடு எப்போதும் விவாதப்பொருளாக இருக்கிறது.குறிப்பாக ஒரு படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் இடையேயான சம்பள வித்தியாசம் என்பது மலைக... மேலும் பார்க்க

இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: “ரஹ்மான் வெளியூர் போனா சபேஷைத்தான் இசையமைக்க கூப்பிடுவாங்க" - பாக்யராஜ்

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் நேற்று (அக்டோபர் 23) காலமானார்.இசையமைப்பாளரான இவர் தன் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசை... மேலும் பார்க்க