சண்டி ஹோமம்: சங்கல்பித்த 48 நாளில் வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்
BB Tamil 9: "கலை இன்னைக்கு பண்ணது எல்லாம் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு" - சிறை சென்ற பார்வதி
அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இரண்டு வாரங்களைக் கடந்திருக்கிறது.
மொத்தம் 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மூன்று பேர் வெளியேறி இருக்கின்றனர்.
இதில் மூன்றே நாட்களில் தாமாகவே முன்வந்து நந்தினி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தியும் கடந்த வாரம் அப்சரவாவும் வெளியேறினர்.

இந்த வார ஜூஸ் ஃபேக்டரி டாஸ்க்கால் வீடே கலவரமாகி இருக்கிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான (அக்.24) மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் பிக் பாஸ் சிறைக்கு விஜே பார்வதியும், கம்ருதீனும் சென்றிருக்கின்றனர். "கலை இன்னைக்கு பண்ணது எல்லாம் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு" என பார்வதி சொல்ல "எதிரிக்கு கூட மன்னிப்பு இருக்கு, துரோகிக்கு மன்னிப்பே இல்ல" என கம்ருதீன் சொல்கிறார். "அவுங்க எல்லோரும் இப்ப என்ன பண்ணுவாங்கனு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்" என பார்வதி சொல்லிக்கொண்டே பாடுகிறார்.



















