செய்திகள் :

சண்டி ஹோமம்: சங்கல்பித்த 48 நாளில் வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்

post image

சகல சங்கடங்களையும் தீர்க்கும் சண்டி ஹோமம்: சங்கல்பித்த 48 நாளில் வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்! தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் சண்டி ஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சண்டி ஹோமம்

சண்டி ஹோமம் எங்கு நடந்தாலும் அதில் கலந்துகொள்வது 100 மடங்கு பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆன்றோர் பெருமக்கள். சண்டி என்றால் ஆதிபராசக்தியின் உக்கிர வடிவம், மேலும் அலைமகள், கலைமகள், மலைமகள் என முப்பெருந்தேவியும் ஒன்றிணைந்த ஓங்கார வடிவம். சண்டியை வேண்டி துதிக்க அங்கு சாந்தி நிலவும் என்பதே உலக வழக்கு. யார் ஒருவர் சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலும் சகல தோஷங்களில் இருந்தும் பாவங்களில் இருந்து விடுபடலாம். தீய சக்தி, விடாத தரித்திரம், தொடரும் விபத்துகள், நீங்காத நோய்கள், தீமை செய்யும் எதிரிகளிடம் இருந்தும் தப்பித்து அமைதியை பெறலாம் என்கிறது ஆன்மிகம்.

சண்டி ஹோமத்தில் கலந்துகொள்ள முப்பெருந்தேவியரின் அருளால் சகல சௌபாக்கியங்களையும் ஐஸ்வரியங்களையும் பெறலாம். கல்வி கலைகளில் சிறந்து விளங்கலாம். நல்ல உத்தியோகமும் பதவி உயர்வும் கிடைக்கும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடந்தேறும். அதிர்ஷ்டம் கூடி நினைத்த காரியங்கள் நிறைவேறும். சொத்து பிரச்னைகள் சுமூகமாக நிறைவேறும்.

சண்டி ஹோமம்

நினைத்தவுடனே தோன்றும் மகாசண்டியை மனதார வேண்டி சங்கல்பித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது புராணங்கள் கூறும் சத்திய வாக்கு. 'நோய்களை அழிப்பவளே சண்டிகா தேவியே. நல்ல வடிவினையும், ஆயுளையும், ஆரோக்கியத்தையும், ஐஸ்வர்யத்தையும், வெற்றியையும், புகழையும் அளித்து எங்களின் பகைவர்களை வெற்றியடையச் செய்ய காண்பீர்களாக! எவருடைய பெருமையை தேவராலும் மூவராலும் முடியாதோ, மகாசண்டியே, மங்கல சண்டியே வணங்குகிறோம், எங்களையும் எங்கள் தலைமுறைகளையும் காத்து அருள்வாய். உன் மனம் குளிர இந்த யக்ஞத்தில் எங்கள் மனங்களையே ஒப்படைக்கிறோம். அதில் உள்ள பயம், கவலை, அறியாமையை நீக்கி நலமே அருள்வாய்!' என்பதே மகாசண்டி மந்திரத்தின் சாரம்.

சண்டி ஹோமம்

ஹோமத்தில் சிறந்தது சண்டி சாந்தி ஹோமம். இதை செய்தால் கவலைகள் நீங்கி அமைதி பிறக்கும். இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்ட 48 நாள்களில் எந்த ஒரு பிரச்னைக்கும் கட்டாயம் தீர்வு கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். இத்தனை பெருமைமிக்க இந்த சண்டி ஹோமத்தை நீண்ட காலத்துக்குப் பிறகு உங்கள் சக்தி விகடன் உங்கள் நலனுக்காக நடத்த உள்ளது. உக்கிரமான ஹோமம் என்பதால் இது சாந்நித்யம் மிக்க கோயில்களில் அல்லது சித்தர் பீடங்களில் மட்டுமே செய்யப்படுவது வழக்கம். இதனால் மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள தாருகாவனம் சித்தர் பீடத்தில் கார்த்திகை மாத முதல் சோமவார நன்னாளில் 2025 நவம்பர் 17-ம் நாள் காலை 9 மணிக்கு மேல் ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த கோயிலில் ஏன் நடத்தப்பட வேண்டும்!

ஆதி காலத்தில் 48000 ரிஷிகளும் நவகோடி சித்தர்களும் கூடி தவமிருந்த புண்ணிய பூமியிது என்கிறார்கள். தேவ பிரச்னப்படியும் இது வேத காலத்தில் நித்ய யக்ஞம் நடைபெற்ற இடம் என்கிறார்கள். காலத்தின் ஓட்டத்தால் இப்பகுதியின் பெருமையும் அடையாளங்களும் சிதைந்துபோக, தற்போது குருஜி. ப.கருணாகரன் சுவாமிகளுக்கு 18 சித்தர்களின் உத்தரவால் இங்கு பிரமாண்டமான சித்தர் பீட சிவலிங்க வடிவ ஆலயமாக எழும்பியுள்ளது. அரிதினும் அரிதான வகையில் பிரமாண்ட சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ள கோயில் இது. இங்கு வந்துவிட்டாலே கவலைகள், தோஷங்கள், ஜோதிடக் கோளாறுகள், பாவங்கள், சாபங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ரிஷிகளின் வாக்கு.

சண்டி ஹோமம்

இங்கு அமைந்துள்ள ஸ்ரீஅகஸ்திய மகாசிவ நாடி ஜோதிட மையம் மிகப் பிரபலமானது. இங்கு துல்லியமாகக் கணிக்கப்பட்ட ஜோதிடத்தால் பலரது பிரச்னைகள் தீர்ந்துள்ளது. இங்குள்ள கோசாலை புனிதம் மிக்கது. இங்கு வெகு அபூர்வமான கோமாதாக்கள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன. இங்கு உலக அமைதிக்காகவும் நன்மைக்காகவும் நித்ய பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு நடைபெறும் பூஜைகளும் ஹோமங்களும் சிறப்பான பரிகாரமாக விளங்குகின்றன. எனவே இங்கு சண்டி ஹோமம் நடைபெறுவது விஷேசமானது.

துக்கத்தில் இருப்பவர்கள், தோல்விகளால் துவண்டவர்கள், திருமணம், மகப்பேறு போன்ற மங்கல காரியங்கள் நடைபெறாமல் தவிப்பவர்கள், கடன், நோய், எதிரிகள் தொல்லை, வழக்கு, தீய சக்திகள் என சிக்கலில் இருப்போர் எல்லோரும் இந்த மகா சண்டி சாந்தி ஹோமத்தில் கலந்து கொண்டால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். இந்த ஹோமத்தால் மந்திர உருவேற்றப்பட்ட விசேஷ ரட்சை நிச்சயம் உங்களைத் துன்பங்களில் இருந்து பாதுகாக்கும். 48 நாள்களில் உங்கள் பிரச்னைகளும் தீரும்.

சண்டி ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோம  சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஹோம  சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை  அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் இருமுடி சமர்ப்பணம் முதல் பதினெட்டாம்படி தரிசனம் வரை | Photos

சபரிமலையில் குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் புதைந்த விவகாரம்; கேரள போலீஸ் DGP கூறுவது என்ன? மேலும் பார்க்க

சபரிமலை: ஜனாதிபதி திரெளபதி முர்மு சுவாமி தரிசனம்; கருப்பு உடையில் இருமுடி செலுத்தி வழிபாடு

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.இரவு ராஜ்பவனில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலைய... மேலும் பார்க்க

ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம்: உங்கள் பிள்ளைகளின் வாழ்வுக்காக வளத்துக்காக இந்த ஹோமம் அவசியம்! ஏன்?

ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம்: உங்கள் பிள்ளைகளின் வாழ்வுக்காக வளத்துக்காக இந்த ஹோமம் அவசியம்! ஏன்? 2025 நவம்பர் 17-ம் நாள் மயிலாடுதுறை பெருஞ்சேரி தாருகாவனம் சித்தர் பீடத்தில் ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் ந... மேலும் பார்க்க

ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம்! எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் பரிகார வழிபாடு சங்கல்பியுங்கள்!

ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம்! உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் பரிகாரம்! 2025 நவம்பர் 17-ம் நாள் மயிலாடுதுறை பெருஞ்சேரி தாருகாவனம் சித்தர் பீடத்தில் ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.ஸ்ரீமக... மேலும் பார்க்க

``முறைகேடுகளைத் தடுக்க, கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு'' - தமிழக அரசு விளக்கம் அளிக்க கோர்ட் உத்தரவு

தமிழகத்திலுள்ள முக்கியக் கோயில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர... மேலும் பார்க்க

காங்கேயம்: சிவன் மலையில் கடல்நீரை வைத்து வழிபாடு - ஆண்டவன் உத்தரவு காரணம் என்ன?

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக்கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயில்களிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி எனப்படும் கண்ணாடிப் பேழை வழிபாடு உண... மேலும் பார்க்க