செய்திகள் :

சபரிமலை: ஜனாதிபதி திரெளபதி முர்மு சுவாமி தரிசனம்; கருப்பு உடையில் இருமுடி செலுத்தி வழிபாடு

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.

இரவு ராஜ்பவனில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்றார்.

அங்கிருந்து கார் மூலம் பம்பா சென்றடைந்தார். பம்பா விநாயகர் கோயிலில் வழிபட்டதுடன், அங்கு இருமுடி நிறைத்தார். ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டினார்கள்.

பம்பாவில் இருந்து பிரத்யேக வாகனத்தில் சுவாமி ஐயப்பன் சாலை வழியாக சன்னிதானத்தை அடைந்தார். ஜனாதிபதி வாகனத்தையும் சேர்த்து ஆறு வகனங்கள் சபரிமலை சென்றன.

நிலக்கல்லில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஜனாதிபதி

சுவாமி ஐயப்பன் சாலையில் வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருமுடி கட்டுடன் பதினெட்டாம்படி ஏறிச் சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்முவை தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் வரவேற்றார்.

பின்னர் சன்னிதானத்தின் முன்பு சென்று ஐயப்ப சுவாமியை மனமுருகி வழிபட்டார். ஜனாதிபதி சுமந்து சென்ற இருமுடி கட்டுகளை சன்னிதானத்தில் சமர்ப்பித்தார். அத்துடன் பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டுகளை சமர்ப்பித்தனர்.

வழக்கமாக இருமுடி கட்டில் உள்ள நெய் மட்டுமே ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக கருவறைக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

அதே சமயம் ஜனாதிபதியின் இருமுடி கட்டுகள் கருவறைக்குள் எற்றுக்கொள்ளப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தீபாராதனையை ஜனாதிபதி தொட்டு வணங்கியதுடன், கோயிலை வலம் வந்து வணங்கினார். சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு உகந்த கருப்பு ஆடையில் ஜனாதிபதி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

கறுப்பு உடையுடன் இருமுடி கட்டி சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்த ஜனாதிபதி திரெபதி முர்மு

தரிசனம் நிறைவுற்ற நிலையில், சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை 3 மணியளவில் பிரத்யேக வாகனத்தில் ஜனாதிபதி மீண்டும் பம்பா செல்கிறார்.

தொடர்ந்து திருவனந்தபுரம் செல்லும் அவர் வரும் 24-ம் தேதி வரை கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

ஐப்பசி மாத பூஜைகளுக்காக கடந்த 17-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இன்று இரவு வரை நடை திறந்திருக்கும்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு தரிசனம் செய்வதை முன்னிட்டு இன்று பக்தர்கள் யாரும் சபரிமலையில் அனுமதிக்கப்படவில்லை. முன்பதிவு முற்றிலும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் இருமுடி சமர்ப்பணம் முதல் பதினெட்டாம்படி தரிசனம் வரை | Photos

சபரிமலையில் குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் புதைந்த விவகாரம்; கேரள போலீஸ் DGP கூறுவது என்ன? மேலும் பார்க்க

ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம்: உங்கள் பிள்ளைகளின் வாழ்வுக்காக வளத்துக்காக இந்த ஹோமம் அவசியம்! ஏன்?

ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம்: உங்கள் பிள்ளைகளின் வாழ்வுக்காக வளத்துக்காக இந்த ஹோமம் அவசியம்! ஏன்? 2025 நவம்பர் 17-ம் நாள் மயிலாடுதுறை பெருஞ்சேரி தாருகாவனம் சித்தர் பீடத்தில் ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் ந... மேலும் பார்க்க

ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம்! எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் பரிகார வழிபாடு சங்கல்பியுங்கள்!

ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம்! உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் பரிகாரம்! 2025 நவம்பர் 17-ம் நாள் மயிலாடுதுறை பெருஞ்சேரி தாருகாவனம் சித்தர் பீடத்தில் ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.ஸ்ரீமக... மேலும் பார்க்க

``முறைகேடுகளைத் தடுக்க, கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு'' - தமிழக அரசு விளக்கம் அளிக்க கோர்ட் உத்தரவு

தமிழகத்திலுள்ள முக்கியக் கோயில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர... மேலும் பார்க்க

காங்கேயம்: சிவன் மலையில் கடல்நீரை வைத்து வழிபாடு - ஆண்டவன் உத்தரவு காரணம் என்ன?

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக்கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயில்களிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி எனப்படும் கண்ணாடிப் பேழை வழிபாடு உண... மேலும் பார்க்க

தஞ்சை பெரிய கோயில் சனி பிரதோஷம்: சிறப்பு அபிஷேகம், வழிபாடு - புகைப்படத் தொகுப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயி... மேலும் பார்க்க