சேலத்தில் கனமழை எதிரொலி; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்ச...
கெட்டி மேளம்: சக நடிகருடன் பிரச்னை செய்தாரா சிபு சூர்யன்? - பின்னணி என்ன?
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' சீரியலில் நடித்து வந்த ஹீரோ சிபு சூர்யன் தொடரிலிருந்து விலகியது குறித்து நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
தற்போது தொடரின் ஷூட்டிங் பெங்களூருவில் நடந்து வருகிற நிலையில் சிபுக்குப் பதில் புதிய ஹீரோ அடுத்த சில தினங்களில் வந்துவிடுவார் என்கிறார்கள். `யாரடி நீ மோகினி', `வானத்தைப்போல' முதலான சீரியல்களில் நடித்த ஸ்ரீகுமாரின் பெயர் அடிபடுகிறது.
இந்த நிலையில் சிபுவின் வெளியேற்றத்துக்கான உண்மையான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சீரியல் தொடர்புடைய சிலரிடம் பேசிய போது,
தங்கள் பெயரை வெளியிட விரும்பாத அவர்கள்,
.jpg)
''சீரியலின் ஹீரோயின் சாயா சிங்குடன் அவருக்கு ஏதோ பிரச்னைனு யூனிட்ல பேசிகிட்டாங்க. அந்தப் பிரச்னை தயாரிப்புத் தரப்பு மற்றும் சேனலுக்கு வர, அதனைத் தொடர்ந்தே சிபுவுக்குப் பதிலா வேற ஆர்ட்டிஸ்டை கமிட் செய்கிற முடிவுக்கு வந்திருக்கு தயாரிப்பு தரப்பு' என்றார்கள்.
சிபு குறித்து மேலும் சில தகவல்களும் சின்னத்திரை வட்டாரத்தில் ரவுண்டு கட்டுகின்றன.
'சர்ச்சைகளில் சிக்குவது இவருக்குப் புதிதில்லையாம். `ரோஜா' சீரியல் ஹிட்டாக போய்க் கொண்டிருந்தபோதே அதிலிருந்து வெளியேறுவதாகச் சொன்னது, டிவி யூனியனில் உறுப்பினராகச் சேரச் சொன்னபோது, மறுத்ததுடன் சங்கம் குறித்து நக்கலாகப் பேசியது என சில சம்பவங்களைக் குறிப்பிடுகின்றனர் விபரமறிந்தவர்கள்.

சாயா சிங்கையோ நாம் தொடர்பு கொண்டு கேட்டோம்.
''நான் வேறொரு ஷூட்டிங்ல இருக்கேன். 'கெட்டி மேளம்' தொடர்ல ஹீரோ சேஞ்ச் ஆகுறார்னே நீங்க சொல்லிதான் எனக்குத் தெரியுது. அதனால விசாரிச்சுட்டு பிறகு பேசறேன்" என முடித்துக் கொண்டார் அவர்.