Bihar Election: Amit shah-க்கு PK சர்ப்ரைஸ், Stalin Alert! | Elangovan Explains
BB Tamil 9: ”உனக்காக என்னப் பேசிருக்கேன்'னு எனக்கு தெரியும்’ - மோதிக்கொள்ளும் பார்வதி, திவாகர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்டோபர் 21) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

கனி திரு இந்த வாரத்தின் தலைவராகப் பதவியேற்றிருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் புரொமோ வெளியாகயிருந்தது.
அதில், ஜூஸ் டாஸ்க்கில் நடுவராக இருக்கும் விஜே பார்வதி மற்றும் திவாகரிடம் ஆதிரை கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
பிறகு கலையரசன் ஜூஸ் பாட்டில் வைத்திருந்த டேபிளைத் தள்ளிவிட்டு கோபப்பட்டார். 'சட்டம் தவறாகப்போகும் போது வன்முறை வெடிக்கும்' என்று கனி பார்வதியிடம் காட்டமாகச் சொல்ல பிக் பாஸ் வீடு கலவரமாகி இருந்தது.
தற்போது இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் எப்போதும் ஒன்றாக இருக்கும் விஜே பார்வதியும், திவாகரும் மோதிக்கொள்கிறார்கள். "என்னாலப் பண்ண முடியாது. உனக்காக என்னப் பேசிருக்கேன்'னு எனக்கு தெரியும். உனக்கு அவுங்க எக்ஸ்ட்ராவா சாப்பாடு கொடுக்குறாங்க... நான் இதை பண்ணல'னு" பார்வதி கடுமையாகக் கோபப்பட்டு திவாகரைப் பார்த்து கத்துகிறார்.

திவாகரும் "உனக்கு அவுங்க சாப்பாடு கொடுக்கலையா? ஓவரா சீன் போடாத..." என்று பதிலுக்கு திவாகரும் கோபப்பட்டு கத்துகிறார்.