செய்திகள் :

BB Tamil 9: "நான் சொல்றது உனக்கு புரியுதா? இல்லையா?"- திவாகருடன் மோதல்; கண் கலங்கிய விஜே பார்வதி

post image

"கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.

இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

கனி திரு இந்த வாரத்தின் தலைவராகப் பதவியேற்றிருக்கிறார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் புரொமோ வெளியாகயிருந்தது.

அதில், ஜூஸ் டாஸ்க்கில் நடுவராக இருக்கும் விஜே பார்வதி மற்றும் திவாகரிடம் ஆதிரை கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

பிறகு கலையரசன் ஜூஸ் பாட்டில் வைத்திருந்த டேபிளைத் தள்ளிவிட்டு கோபப்பட்டார். "சட்டம் தவறாகப்போகும் போது வன்முறை வெடிக்கும்" என்று கனி, பார்வதியிடம் காட்டமாகச் சொல்ல பிக் பாஸ் வீடு கலவரமாகி இருந்தது.

இரண்டாவது புரொமோவில் எப்போதும் ஒன்றாக இருக்கும் விஜே பார்வதியும், திவாகரும் மோதிக்கொண்டார்கள். "என்னால பண்ண முடியாது. உனக்காக என்ன பேசிருக்கேன்னு எனக்குத் தெரியும். உனக்கு அவுங்க எக்ஸ்ட்ராவா சாப்பாடு கொடுக்குறாங்க. நான் இதைப் பண்ணல" என்று பார்வதி கடுமையாகக் கோபப்பட்டு திவாகரைப் பார்த்து கத்தியிருந்தார்.

விஜே பார்வதி
விஜே பார்வதி

திவாகரும், "உனக்கு அவுங்க சாப்பாடு கொடுக்கலையா? ஓவரா சீன் போடாத" என்று பதிலுக்கு திவாகரும் கோபப்பட்டு கத்தினார்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில், "நான் சொல்றது உனக்கு புரியுதா? இல்லையா? புரிஞ்சுக்கவே மாட்டிங்குறிங்க. நான் யாரை நம்பியும் கிடையாது.

விஜே பார்வதி
விஜே பார்வதி

என் கேம் எனக்கு விளையாட தெரியும். ஒரு சிலர் பண்ற விஷயம்தான் எனக்கு கடுப்பா இருக்கு. முதல் வாரத்தில் இருந்து இதைத்தான் பண்ணிட்டு இருக்காங்க" என்று கண்கலங்குகிறார் பார்வதி.

கெட்டி மேளம்: சக நடிகருடன் பிரச்னை செய்தாரா சிபு சூர்யன்? - பின்னணி என்ன?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' சீரியலில் நடித்து வந்த ஹீரோ சிபு சூர்யன் தொடரிலிருந்து விலகியது குறித்து நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.தற்போது தொடரின் ஷூட்டிங் பெங்களூருவில் நடந்த... மேலும் பார்க்க

BB Tamil 9: ”உனக்காக என்னப் பேசிருக்கேன்'னு எனக்கு தெரியும்’ - மோதிக்கொள்ளும் பார்வதி, திவாகர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்டோபர் 21) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 16: `ஏதாச்சும் பண்ணுங்க பாஸ்' - பாரு, வியன்னாவின் போர்கொடி

வீடு பெருக்கும் ஒரு சிறிய வேலையைக்கூட செய்யாமல் முரண்டு பிடித்து அதற்காக ஒரு மணி நேரம் சண்டை போடுவது ஒவ்வொரு சீசனிலும் நடக்கிறது. இந்த எபிசோடை அதன் உச்சம் எனலாம்.இது பிக் பாஸ் வீடுகளில் மட்டுமல்ல. ஏறத... மேலும் பார்க்க

BB Tamil 9: 'வன்முறை வெடிக்கும்'- ஜூஸ் டாஸ்க்கால் கலவரமாகும் பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்டோபர் 21) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்... மேலும் பார்க்க

`கெட்டி மேளம்' சீரியலில் இருந்து வெளியேறினார் ஹீரோ சிபு சூர்யன்; காரணம் என்ன?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘கெட்டி மேளம்’ தொடரிலிருந்து நடிகர் சிபு சூரியன் வெளியேறியுள்ளார்.வெளியேற்றத்துக்கான நிஜமான காரணம் தெரியவில்லை. ஆனால் அவருக்கு பதில் வேறு நடிகரை கமிட் செய்வதில் தயார... மேலும் பார்க்க