பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
`கெட்டி மேளம்' சீரியலில் இருந்து வெளியேறினார் ஹீரோ சிபு சூர்யன்; காரணம் என்ன?
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘கெட்டி மேளம்’ தொடரிலிருந்து நடிகர் சிபு சூரியன் வெளியேறியுள்ளார்.
வெளியேற்றத்துக்கான நிஜமான காரணம் தெரியவில்லை. ஆனால் அவருக்கு பதில் வேறு நடிகரை கமிட் செய்வதில் தயாரிப்புத் தரப்பு மும்முரமாக இருப்பதாகத் தெரிகிறது.
நடிகர் பொன்வண்ணன், நடிகைகள் பிரவீனா, சாயா சிங் உள்ளிட்டோர் நடிக்க கடந்த ஜனவரி மாதம் ஒளிபரப்பாகத் தொடங்கியது `கெட்டி மேளம்' சீரியல். இந்த சீரியலில் வெற்றி என்கிற கேரக்டரில் ஹீரோவாக அதாவது சாயா சிங்கை காதலித்து கல்யாணம் செய்து கொள்பவராக நடித்து வந்தார் சிபு சூரியன்.
சன் டிவியில் அதிக ஆண்டுகள் ஒளிபரப்பான ‘ரோஜா’ தொடரில் ஹீரோவாக நடித்தாரே அவரே தான்.

சீரீயல் தொடங்கி ஓராண்டு நெருங்கும் வேளையில் தற்போது சீரியலில் இருந்து சிபு சூரியன் வெளியேறிவிட்டதாகத் தெரிய வருகிறது.
சில தினங்களுக்கு முன் முறைப்படி தெரிவித்துவிட்டு தொடரில் இருந்து இவர் விலகி விட்டதாக சீரியல் யூனிட் தரப்பிலிருந்து நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் வெலியேற்றத்துக்கான நிஜமான காரனம் இதுவரை தெரியவில்லை.
அடுத்த சில தினங்களில் முறைப்படி ‘இவருக்குப் பதில் இவர்’ கார்டு போட்டு இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் தெரியப்படுத்துவார்கள் எனத் தெரிய வருகிறது.