பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
Gold: ரூ.9.5 கோடி தங்க ஆடை; கின்னஸ் சாதனை -Viral Video
துபாய் என்றாலே ஆடம்பரமும் பிரமிப்பும் தவிர்க்க முடியாதவை. குறிப்பாக தங்க நகைகளுக்கும், அதன் டிசைன்களுக்கும் குறிப்பிடத்தக்க இடத்தை தக்கவைத்திருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பழைமையான தங்கம் மற்றும் நகை தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான அல் ரோமைசான் கோல்டு (Al Romaizan Gold) நிறுவனம் உருவாக்கிய தங்க உடை ஆடம்பர ஃபேஷன் உலகின் முத்திரை பதித்திருக்கிறது.
24 கேரட் தங்கத்தால் 10.5 கிலோ எடையில் உருவாக்கப்பட்டிருக்கும் தங்க உடை, விலைமதிப்பற்ற வைரங்கள், மாணிக்கங்கள், மரகதங்களின் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அல் ரோமைசான் கோல்நிறுவனத்தின்கூற்றுப்படி, 398 கிராம் எடையுள்ள தங்க கிரீடம், 8,810.60 கிராம் எடையுள்ள ஒரு ஸ்டேட்மென்ட் நெக்லஸ், 134.1 கிராம் எடையுள்ள காதணிகள் மற்றும் 738.5 கிராம் எடையுள்ள ஹியார் எனப்படும் இடுப்பு ஆபரணம் என நான்கு பகுதிகளாக ஆடை உருவாக்கப்பட்டிருக்கிறது.
1,088,000 டாலர் (தோராயமாக ரூ.9.5 கோடி) மதிப்புள்ள இந்த ஆடை, துபாயின் ஆடம்பரத்தை எடுத்துக்காட்டுவதாக ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்த தங்க உடை மத்திய கிழக்கு நாடுகளின் கலைத் திறன், நுட்பமான வடிவமைப்பு, மின்னும் அழகு போன்றவற்றால் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
அதே நேரம் இந்த தங்க உடை வணிக விற்பனைக்காக அல்ல என்றும், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வரவிருக்கும் ஃபேஷன் மற்றும் நகை கண்காட்சிகளில் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தங்கம் மற்றும் நகைகளின் முதன்மையான பிராண்டான அல் ரோமைசானால் உருவாக்கப்பட்ட இந்த தலைசிறந்த படைப்பு, ஃபேஷன், நகைகளின் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்ட ஷார்ஜாவின் 56வது மத்திய கிழக்கு கண்காணிப்பு மற்றும் நகை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த ஆடை, கின்னஸ் உலக சாதனைகளில் அதிகாரப்பூர்வமான தங்க உடை என அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.