Diwali Tour: ஊட்டி, கொடைக்கானல் போர் அடிச்சுடுச்சா? இங்க விசிட் பண்ணுங்க; சூப்பர...
ஸ்ரீவில்லிபுத்தூர்: `ஏ, தள்ளு, தள்ளு' - நடுரோட்டில் இறங்கி தள்ளிய பயணிகள்; வைரலான அரசு பேருந்து
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மல்லி வழியாக திருத்தங்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றுள்ளது.
ஓட்டுநர் வண்டியை இயக்க முயற்சித்தும் பயனளிக்கவில்லை. மேலும் பேருந்தில் குறைந்த நபர்களே இருந்ததால் நடத்துனர் சாலையில் சென்ற பொதுமக்களை அழைத்து பேருந்தின் பின்புறமாகத் தள்ளிவிட்டு ஓரங்கட்டியுள்ளார்.

அந்த இலவச பேருந்தில் இருந்த பயணிகள் அங்கேயே இறக்கி விடப்பட்டுள்ளனர்.
நாம் ஏறுகின்ற பேருந்து தான் இப்படி பாதி வழியில் நிற்க வேண்டுமா என்கின்ற மைண்ட் வாய்ஸ் உடன் அடுத்த பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பேருந்தை தள்ளுவதை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் நெட்டிசன்கள் இதனை கேலி செய்து வருகின்றனர்.