செய்திகள் :

Surya 47: முதல்முறையாக சூர்யாவுடன் இணைந்த நஸ்ரியா; சூர்யா 47 படத்தை இயக்கும் ஆவேசம் இயக்குநர்

post image

சூர்யாவின் 45-வது படமாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் `கருப்பு' படம் அடுத்தாண்டு வெளியாகவிருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா தனது 46-வது படமாக, கடந்த ஆண்டு பிற்பாதியில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த தெலுங்கு படமான `லக்கி பாஸ்கர்' படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், ஹீரோயினாக மமிதா பைஜு நடிக்கிறார்.

Surya 46 - வெங்கி அட்லூரி, மமிதா பைஜு, ஜி.வி.பிரகாஷ்
Surya 46 - வெங்கி அட்லூரி, மமிதா பைஜு, ஜி.வி.பிரகாஷ்

இந்த நிலையில், கடந்த ஆண்டு மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்ற `ஆவேசம்' பட இயக்குநர் ஜித்து மாதவனுடன் சூர்யா இணைந்திருக்கிறார்.

சூர்யாவின் 47-வது படமான இதில் நஸ்ரியா, நஸ்லன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆவேசம் படத்துக்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

ழகரம் ஸ்டுடியோஸ் (Zhagaram Studios) தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது.

இந்நிகழ்வில், இயக்குநர் ஜித்து மாதவன், சூர்யா, ஜோதிகா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பட பூஜை க்ளிக்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Vijay: தயாரிப்பாளர் மகள் திருமண வரவேற்பு; கலந்துகொண்டு வாழ்த்திய விஜய்

நேற்று சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் T.சிவாவின், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.T.சிவா `பூந்தோட்டக் காவல்காரன்', `அரவான்', `சரோஜா', `கடவுள் இருக்கான் குமாரு' போன்ற பல படங்களை தயாரித்துள்ள... மேலும் பார்க்க

ஏவி.எம்.சரவணனை முதலாளி என்று அழைத்தவர், எம்.ஜி.ஆர்.!

ஏவி.எம். சரவணன் குறித்தும் எம்.ஜி.ஆர் உடனான அவரின் நட்பு குறித்தும், ஏவி.எம்.நிறுவனத்தில் இணைந்து தொடர்ந்து அந்நிறுவனத்தில் பயணிக்கும் முக்கிய புள்ளி ஒருவரிடம் பேசினோம்."எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா படத... மேலும் பார்க்க

மலேசியாவில் அஜித், விஜய், சிவகார்த்திகேயன்! - கோலிவுட் அப்டேட்ஸ்

டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் கர்நாடக சங்கீதம் களை கட்டும். ஒரு பக்கம் நாரத கான சபா, இன்னொரு பக்கம் மியூசிக் அகாடமி, மறு பக்கம் காமராஜ் மெமோரியல் ஹால் என்று ஒவ்வொரு அரங்கிலும் இசை மேளா இனிதே நடக்க... மேலும் பார்க்க

Arasan: ``இன்னும் 3 நாள்ல மதுரைல ஷூட்டிங்!" - மாஸ் லுக்கில் சிலம்ப(அ)ரசன் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்

சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்' படம் உருவாகிறது.கடந்த அக்டோபரில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளன்று அரசன் பட ப்ரோமோ வீடியோ ... மேலும் பார்க்க