செய்திகள் :

மலேசியாவில் அஜித், விஜய், சிவகார்த்திகேயன்! - கோலிவுட் அப்டேட்ஸ்

post image

டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் கர்நாடக சங்கீதம் களை கட்டும். ஒரு பக்கம் நாரத கான சபா, இன்னொரு பக்கம் மியூசிக் அகாடமி, மறு பக்கம் காமராஜ் மெமோரியல் ஹால் என்று ஒவ்வொரு அரங்கிலும் இசை மேளா இனிதே நடக்கும்.

கர்நாடக வித்வான்களின் இசைக் கருவிகளின் கச்சேரி, வாய்ப்பாட்டு பாட்டுக் ஆலாபனை கச்சேரி என்று கர்நாடக இசையில் கலந்து கட்டி அசத்துவார்கள்.

சென்னை போலவே இந்த டிசம்பர் மாதம் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என நட்சத்திரங்கள் மலேசியாவில் முகாமிட இருக்கிறார்கள்.

அஜித்குமார் கார் ரேஸ் பந்தயம், விஜய் `ஜனநாயகன்’ பட இசை வெளியிட்டு விழா, சிவ கார்த்திகேயன் சினிமா படப்பிடிப்பு என்று டிசம்பர் மாதம் மலேசியாவில் முகாமிடுகிறார்கள்.

அஜித் கடந்த இரண்டு வருடமாக தனது கனவு, லட்சியமான கார் ரேஸ் போட்டியில் மட்டுமே தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் இத்தாலியில் நடந்த கார் ரேஸ் அவார்டு விழாவில் குடும்பத்தோடு பங்கேற்றார். அங்கே அவருக்கு அவார்டு வழங்கி கெளரவம் செய்தனர். இப்போது டிசம்பர் முதல் வாரத்தில் மலேசியாவில் நடக்கும் கார் ரேஸ் பந்தயம் நடக்கிறது. அஜித் கலந்து கொண்டு போட்டியில் தனது கை வரிசை காட்டி வருகிறார். தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை சந்தித்து செல்ஃபி எடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்,

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சிவ கார்த்திகேயன் நடித்து வந்த பராசக்தி படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. சிவ கார்த்திகேயன் டப்பிங் பேசி முடித்து விட்டார். அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதுப் படத்தில் சிவ கார்த்திகேயன் நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் முதல் செட்யூல் படப்பிடிப்பு மலேசியாவில் டிசம்பர் மாதம் முழுவதும் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கின்றனர்.

#Thalapathy69 #Jananayagan
#Thalapathy69 #Jananayagan

விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படுகிற திரைப்படம் `ஜனநாயகன்’. இந்த படத்தின் ஆடியோ விழாவை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் 27 ஆம் தேதி விமரிசையாக நடக்கும் ஆடியோ விழாவில் முக்கியமான சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல், சில அரசியல் புள்ளிகளும் மேடையில் கலந்து கொள்ள அதிரடி ஏற்பாடுகள் நடக்கிறது.

மலேசியாவில் பெருமளவில் மக்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய பிரம்மாண்ட ஆடிட்டோரியத்தை விஜய் தரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆக டிசம்பர் மாதத்தில் அஜித், விஜய், சிவ கார்த்திகேயன் மூவரும் மலேசிய மண்ணில் இருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து சிம்புவும் தற்போது மலேசியாவில் முகாமிட்டுள்ளார். இதனால் மலேசிய சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஏவி.எம்.சரவணனை முதலாளி என்று அழைத்தவர், எம்.ஜி.ஆர்.!

ஏவி.எம். சரவணன் குறித்தும் எம்.ஜி.ஆர் உடனான அவரின் நட்பு குறித்தும், ஏவி.எம்.நிறுவனத்தில் இணைந்து தொடர்ந்து அந்நிறுவனத்தில் பயணிக்கும் முக்கிய புள்ளி ஒருவரிடம் பேசினோம்."எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா படத... மேலும் பார்க்க

Arasan: ``இன்னும் 3 நாள்ல மதுரைல ஷூட்டிங்!" - மாஸ் லுக்கில் சிலம்ப(அ)ரசன் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்

சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்' படம் உருவாகிறது.கடந்த அக்டோபரில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளன்று அரசன் பட ப்ரோமோ வீடியோ ... மேலும் பார்க்க

ஏவி.எம்.சரவணன்: `என்னமோ மனசு கேட்கல; மயானம் வரை போய்.!’ - கலங்கிய சிவகுமார்

ஏவி.எம்.சரவணன் மறைந்த அன்று, அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சிவகுமார், கண்கலங்கி நின்றார். அவரின் மேல் கொண்ட அன்பு, சிவகுமாரை சுற்றி நின்ற அனைவராலும் அன்று உணரப்பட்டது. ``அவரோட நியாபகமாதான... மேலும் பார்க்க

Stephen Review: அசத்தல் மேக்கிங் ஓகே; சீரியல் கில்லர் கதையில் இவற்றையும் கவனித்திருக்கலாமே?!

குறும்படத்திற்கான ஆடிஷனுக்கு வரும் பெண்களை ஒரு குறிப்பிட்ட வசனத்தைப் பேசச் சொல்கிறான் ஸ்டீபன் ஜெபராஜ் (கோமதி சங்கர்). இவ்வாறு வருபவர்கள் வசனம் பேச, அவர்கள் இறுதி வசனத்தை அடையும் தருணத்தில் ஸ்டீபன் கத்... மேலும் பார்க்க

Soori: `இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம்!' - ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துவரும் படம் ‘மண்டாடி’. எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் மகிமா நம்பியார், நடிகர் சுஹால் உள்ளி... மேலும் பார்க்க