செய்திகள் :

``திருமணம்‌ ரத்தாகிவிட்டது'' - முதன்முதலாக‌ மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

post image

இந்திய மகளிர்‌ கிரிக்கெட்‌ அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர்‌ பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது.

ஆனால், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அன்று திருமணம் நடக்கவில்லை. அதே அன்று பலாஷ் முச்சாலுக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.

இன்ஸ்டா ஸ்டோரி
இன்ஸ்டா ஸ்டோரி

இதன் பின், இவர்களது திருமணம் நின்றுவிட்டது. இருவரும் பிரிந்துவிட்டனர் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஸ்டோரி

இந்த நிலையில், திருமணம்‌ நின்றது குறித்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி மந்தனா.

அதில், "சில வாரங்களாக, என்னை குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்போது நான் பேச வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன்.

நான் ஒரு பிரைவெட் நபர். என்னுடைய விஷயங்களையும் அப்படி வைக்கவே நினைக்கிறேன். ஆனால், எனது திருமணம் ரத்தாகி விட்டது என்பதை தெளிவாக்க விரும்புகிறேன்.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள‌ நினைக்கிறேன். இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் பிரைவசியையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொருவரையும் ஒரு விஷயம் இயக்குகிறது என்று நான் நம்புகிறேன். அப்படி எனக்கு என்னுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது‌ மிக முக்கியம்.

எவ்வளவு காலம்‌ முடியுமோ அவ்வளவு காலம் இந்தியாவிற்காக நிறைய விளையாடுவேன். கோப்பைகளை வெல்லுவேன்.‌ இது தான்‌ என்னுடைய லட்சியம்" என்று‌ குறிப்பிட்டுள்ளார்.

மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album

ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள். ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்... மேலும் பார்க்க

Messi India Tour: மெஸ்ஸியுடன் மோத தயாராகும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த்; வைரலாகும் பயிற்சி வீடியோ!

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு எதிராகப் போட்டியிடத் தயாராகும் வகையில், நாள்தோறும் கால்பந்து பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Messi: G... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டும் தோல்வி; உலகக்கோப்பை தகுதிச்சுறில் சொதப்பிய இந்திய கூடைப்பந்து அணி

FIBA கூடைப்பந்து உலகக்கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆசிய அணிகளுக்கிடையேயான தகுதிச்சுற்றில் நேற்று இந்தியா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதிய போட்டி நேரு ஸ்டேடியத்த... மேலும் பார்க்க

உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: 17 பதக்கங்களை வென்று விருதுநகர் மாணவர்கள் சாதனை; உற்சாக வரவேற்பு!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது கடந்த நவம்பர் 22, 23ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியா, பங்களாதேஷ், கென்யா, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து 1400 மாணவர்கள் கலந்து ... மேலும் பார்க்க

Kabaddi: மீண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணி - குவியும் வாழ்த்துகள்!

வங்காள தேசம் தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் கபடி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கபடிக் குழு சீன தைபே அணியை 35–28 என்ற புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர்... மேலும் பார்க்க