செய்திகள் :

Hockey Men's Junior WC: இறுதிப்போட்டி கனவை இழந்த இந்தியா; அரையிறுதியில் ஜெர்மனியிடம் படுதோல்வி

post image

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் இன்று (டிசம்பர் 7) நடைபெற்றது.

முன்னதாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளில், ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறின.

இன்று சென்னையில் மாலை 5:30 மணியளவில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஸ்பெயின் vs அர்ஜென்டினா அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஸ்பெயின் vs அர்ஜென்டினா
Hockey Men's Junior WC - Spain vs Argentina

போட்டி ஆரம்பித்த 6-வது நிமிடத்திலேயே கோல் அடித்தது. அதற்குப் போட்டியாக 20-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவும் கோல் அடிக்க ஆட்டத்தின் முதற்பாதி முடிவில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலைக்கு வந்தன.

அதைத்தொடர்ந்து பரபரப்பாகச் சென்ற இரண்டாம் பாதியில் ஸ்பெயின் அணி வீரர் செர்ராஹிமா கடைசி 5-வது நிமிடத்தில் கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் 2 - 1 என அர்ஜென்டினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இப்போட்டியைத் தொடர்ந்து, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோத இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்தியாவும், ஜெர்மனியும் பலப்பரீட்சையில் இறங்கின.

ஆட்டம் ஆரம்பித்த வேகத்திலேயே ஜெர்மனி 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி சுட வாய்ப்பில் கோல் அடித்து, அடுத்த நிமிடத்திலேயே மேலும் ஒரு கோல் அடித்து 2 - 0 என முன்னிலை பெற்று இந்தியாவை அழுத்தத்துக்குள்ளாக்கியது.

இரண்டாம் பாதியிலும் தனது வேகத்தை நிறுத்தாத ஜெர்மனி, இந்தியாவை கோல் கணக்கைத் தொடங்கவிடாமல் 39-வது நிமிடத்திலும், 48-வது கோல் அடித்து மேலும் அதிர்ச்சி கொடுத்தது.

அடுத்த நிமிடத்திலேயே இந்திய வீரர் அனுமோல் எக்கா ஒரு கோல் அடித்து இந்தியாவின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். ஆனாலும், இந்தியாவால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி 5 - 1 என அபார வெற்றி பெற்று இந்தியாவின் இறுதி போட்டி கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஸ்பெயின் vs ஜெர்மனி இறுதி போட்டி டிசம்பர் 10-ம் தேதி சென்னையில் நடைபெறும்.

Hockey Men's Junior WC: திக் திக் கடைசி நிமிடங்கள்; பெல்ஜியமை வென்று அரையிறுதிக்குள் சென்ற இந்தியா!

தமிழ்நாட்டில் நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரானது காலிறுதிச் சுற்றை எட்டியிருக்கிறது.லீக் சுற்று போட்டிகள் முடிவில் 6 குழுக்களில் முதலிடம் பிடித்த 6 அணிகள் மற்றும் இரண்ட... மேலும் பார்க்க

Hockey Men's Junior WC: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா; மற்ற 7 அணிகள் எவை?

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நவம்பர் 28-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் இத்தொடரில் பங்கேற்றுள்ள 24 அணிகள் மொத்தம் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.இதி... மேலும் பார்க்க

Hockey Men's Junior WC 2025: ஓமன் அணியை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்; 17 - 0 என அபரா வெற்றி!

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நேற்று (நவம்பர் 28) முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.டிசம்பர் 10 வரை இத்தொடரில் அனைத்து போட்டிகளும் மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும்.24 அணிகள் விளையாடும் இத்த... மேலும் பார்க்க

மதுரையில் Hockey Junior WC: இங்கிலாந்து vs நெதர்லாந்து - `விறு விறு போட்டி' இறுதியில் வென்றது யார்?

மதுரை, தமிழ்நாடு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 14வது சர்வதேச ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது நாள் முதல் போட்டி மிதமான மழையுடன் தொடங்கியது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கி... மேலும் பார்க்க

சென்னையில் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை: சிலி அணியை பந்தாடிய இந்திய அணி! | A Photo Highlights

Junior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைJunior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைJunior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைJunior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைJunior Hockey WC: ஹாக்கி... மேலும் பார்க்க

Junior Hockey WC: ஹாக்கி உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் இந்திய அணி அபாரம்; பந்தாடப்பட்ட சிலி அணி!

ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை நேற்று தமிழகத்தில் தொடங்கியது.நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரையில் நடைபெறும் இத்தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்கேற்றிருக்கின்றன. அவை 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்க... மேலும் பார்க்க