செய்திகள் :

முதியோர், கைம்பெண்கள் வங்கி கணக்கில் கூடுதலாக ரூ.2000 வரவு! - அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஸ்டாலின்

post image

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.

'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் இன்று (மார்ச்.3) முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் உதவிதொகையுடன் கூடுதலாக ரூ.2000 வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதல் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில்," கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்! இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!"என்று பதிவிட்டிருக்கிறார்.

நாங்குநேரி இரட்டைக் கொலை: `முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?' - விஜய் கேள்வி!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்க... மேலும் பார்க்க

Iran - America: ``4-5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்" ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய இந்தப் போர், தற்போது மத்த... மேலும் பார்க்க

தேர்தல்: ``அவசரமாக நேற்று டெல்லி சென்றது ஏன்?" - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தீவிரமாகிவருகிறது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

Strait of Hormuz : `ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரான் - உலகப் பொருளாதாரத்தையே ஆளும் சிறிய பகுதி!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடுவதற்கு ஈரான் உத்தரவிட்டுள்ளது. இந்தச் செய்தி, வர்த்தக உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் - ஒரு பார்வை!

'உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது....' இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான "The United Fruit Co." என்றப் புகழ்பெற்ற கவிதை நூல... மேலும் பார்க்க

`சமூகநீதி என்றாலே பிரதமர் மோடி தான்; திமுகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'- அன்புமணி

"சமூக நீதி என்றாலே மோடிதான். திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை...." என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாதாஸ் கடுமையாக பேசியதற்கு காரணம், அவருடைய முந்தைய பேச்சால் அதிருப்தி அடைந்துள்ள பாஜக-வினர... மேலும் பார்க்க