செய்திகள் :

தேர்தல்: ``அவசரமாக நேற்று டெல்லி சென்றது ஏன்?" - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

post image

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தீவிரமாகிவருகிறது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``டெல்லியிலிருந்து முறையான அழைப்பு வந்ததால்தான், டெல்லி வந்தேன். நேற்று இரவு அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆலோசித்தோம். தேர்தலில் இரு கட்சிகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போதுள்ள கூட்டணி மிகவும் சுமூகமாகவும் வலுவாகவும் உள்ளது. சில புதிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முறைப்படி அறிவிக்கப்படும்.

சசிகலா
சசிகலா

சசிகலா குறித்தும், அவரின் புதியக் கட்சி குறித்தும், அவர் கூட்டணியில் இணைவாரா என்பது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அது தேவையற்ற கேள்வி, அதை இத்துடன் விட்டுவிடுங்கள். ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, தி.மு.க கூட்டணியில்தான் குழப்பம் நிலவுவது தெரிகிறது. ஆனால், அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்விதக் கவலையுமின்றி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வரவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்." என்றார்.

நாங்குநேரி இரட்டைக் கொலை: `முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?' - விஜய் கேள்வி!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்க... மேலும் பார்க்க

Iran - America: ``4-5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்" ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய இந்தப் போர், தற்போது மத்த... மேலும் பார்க்க

Strait of Hormuz : `ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரான் - உலகப் பொருளாதாரத்தையே ஆளும் சிறிய பகுதி!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடுவதற்கு ஈரான் உத்தரவிட்டுள்ளது. இந்தச் செய்தி, வர்த்தக உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

முதியோர், கைம்பெண்கள் வங்கி கணக்கில் கூடுதலாக ரூ.2000 வரவு! - அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்... மேலும் பார்க்க

ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் - ஒரு பார்வை!

'உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது....' இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான "The United Fruit Co." என்றப் புகழ்பெற்ற கவிதை நூல... மேலும் பார்க்க

`சமூகநீதி என்றாலே பிரதமர் மோடி தான்; திமுகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'- அன்புமணி

"சமூக நீதி என்றாலே மோடிதான். திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை...." என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாதாஸ் கடுமையாக பேசியதற்கு காரணம், அவருடைய முந்தைய பேச்சால் அதிருப்தி அடைந்துள்ள பாஜக-வினர... மேலும் பார்க்க