"இந்து பெண்கள் ஜிம்மிற்குச் செல்லாதீர்; வீட்டில் யோகா செய்யுங்கள்" - பாஜக எம்எல்...
Ajith: `தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும்.!' - பாராட்டிய பார்த்திபன்; நன்றி தெரிவித்த அஜித்
நடிகர் அஜித் ஸ்பெயினில் தன்ன சந்தித்த ரசிகர்கள் விசிலடித்தபோது, நடிகர் அஜித் தன் பார்வையாலும், சைகையாலும் அதைக் கண்டித்தார்.
அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தன் சமூக ஊடகப்பக்கத்தில் ``decision ma’KING’ Ajith தான் ! சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும்.
பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர்.
That Angry look of #Ajithkumar when a Fan of him whistled at the spot of Racingpic.twitter.com/epPJBmijsJ
— AmuthaBharathi (@CinemaWithAB) October 13, 2025
தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே promotionக்கு கூட வராமல், தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர்.
ஆச்சர்யமான அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர் எனக்கும்!" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித் குமார், ``அன்புள்ள பார்த்திபன் சார், உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகர் அஜித் குமாரின் பதிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நடிகர் பார்த்திபன்,`` ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல், ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வது என் வழக்கம்!
அப்படி நேற்று முன்தினம் நடிகர் அஜித்குமார் பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கமிகு ரசிகர்கள் நன்றி தெரிவிக்க நான் அதை(யும்) ரசித்தேன்.

ஆனால் நான் சற்றும் எதிர்பாராமல் அவரிடமிருந்தே அந்தக் குறுஞ்செய்தி வந்தது. எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு, சுடச்சுட நன்றி தெரிவிப்பதை அவர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்பதனை எண்ணி மனதிற்குள் பாராட்ட நினைத்தேன். அது இப்படி வெளியே வந்து விட்டது" எனப் பகிர்ந்திருக்கிறார்.