கேரளா: "வேலையை விடும் திட்டமில்லை" - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக...
தென்காசி: 2 நாளில் 27 நபர்களைக் கடித்துக் குதறிய தெருநாய்கள்; பதறவைக்கும் CCTV காட்சிகள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிவதோடு மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி துரத்திக் கடிப்பது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பகத்சிங் என்பவரது 7 வயதுக் குழந்தை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பள்ளிச் சிறுமியை கடித்துக் குதறியது.
இது போன்று மேலக்கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (40), கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (25), பெண் ஒருவர் என சுமார் 15க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துள்ளது.

இதேபோல் கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய 27 நபர்களைத் தெருநாய் கடித்ததில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெருநாய்கள் சாலையில் செல்வோரைக் கடிக்கின்ற வீடியோ காட்சிகளும் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.