நெல்லை: வெளுத்து வாங்கும் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! | Albu...
குஜராத்: அமைச்சரான ரிவாபா ஜடேஜா `டு' இளம் துணை முதல்வர் - புதிய அமைச்சரவை!
குஜராத் அரசில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் 21 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார்.
குஜராத் அரசில் இளைஞர்களுக்கும் புதியோருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக முதலமைச்சர் தவிர அனைத்து அமைச்சர்களும் நேற்றையதினம் (அக்டோபர் 16 - வியாழன்) ராஜினாமா செய்தனர்.
கனுபாய் மோகன்லால் தேசாய், ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல், குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா மற்றும் பர்ஷோத்தம்பாய் ஓதவ்ஜிபாய் சோலங்கி ஆகிய நான்கு அமைச்சர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படாமல் அவர்கள் தக்கவைக்கப்பட்டனர்.
21 புதிய அமைச்சர்களுடன் 26 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது குஜராத் அமைச்சரவை.
இந்த புதிய அமைச்சரவையில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.
ஸ்வரூப்ஜி தாக்கூர், பிரவென்குமார் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வகேலா, குன்வர்ஜி பவாலியா, அர்ஜுன் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர வகானி, பிரஃபுல் பன்ஷேரியா, ஹர்ஷ் சங்கவி மற்றும் கனுபாய் தேசாய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். குஜராத் வரலாற்றில் இந்த பதவிக்கு வரும் இளம் அரசியல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2027 சட்டமன்ற தேர்தல்களில் பணியாற்றுவதற்காக கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு ஓய்வு வழங்கப்படுவதாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.