செய்திகள் :

4 கும்கிகளுடன் சுற்றி வளைப்பு - சிக்கியது கோவை ரோலக்ஸ் யானை

post image

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானை, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்.  தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை விளை நிலங்கள், வீடுகளை சேதப்படுத்துவதாக புகார் எழுந்தது.

ரோலக்ஸ் யானை

அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் ‘ரோலக்ஸ்’ என்று பெயரிட்டனர். இந்த யானையால் மனித உயிர்களுக்கு சேதங்களும் ஏற்பட்டதால், அதை பிடிக்க சொல்லி விவசாயிகளும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2 மாதங்களாக ரோலக்ஸ் யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி, கபில்தேவ் கும்கி யானைகளும், முதுமலை யானைகள் முகாமில் இருந்து வசிம், பொம்மன் கும்கி யானைகளும் அழைத்து வரப்பட்டன.

ரோலக்ஸ் யானை

மருத்துவர்கள் வெண்ணிலா, கலைவாணன், ராஜேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று இரவு தொண்டாமுத்தூர் இச்சுக்குழி பகுதியில் யானை சுற்றி வந்துள்ளது.

அங்கு சென்ற மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 2 மணியளவில் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பிறகு வனத்துறையினர் அந்த யானைக்கு கயிறு கட்டி, காலை 7 மணியளவில் கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றினார்கள்.

ரோலக்ஸ் யானை
ரோலக்ஸ் யானை

ரோலக்ஸ் யானையை ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்ஸ்லிப் உள்ள வரகளியார் முகாமிற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு அந்த யானையை கும்கியாக மாற்றுவதற்கான பயிற்சி வழங்கப்படும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

"இந்து பெண்கள் ஜிம்மிற்குச் செல்லாதீர்; வீட்டில் யோகா செய்யுங்கள்" - பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. கோபிசந்த் பட... மேலும் பார்க்க

குஜராத்: அமைச்சரான ரிவாபா ஜடேஜா `டு' இளம் துணை முதல்வர் - புதிய அமைச்சரவை!

குஜராத் அரசில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் 21 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார். குஜராத் அரசில் இளைஞர்களுக்கும் புதியோருக்கும் ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "ஆனந்த் பேசிய ஆதராம் என்னிடம் இருக்கிறது; விஜய்தான் முழுப்பொறுப்பு" - வேல்முருகன்

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "நடிகர்களை நடிகராகப் பார்க்க வேண்டும். அவர்களைப் ... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: ``கண்துடைப்பு ஆணையம்; 4.5 ஆண்டுகளில் அமைத்த ஆணையங்களால் என்ன பயன்?" - அண்ணாமலை கேள்வி

`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆணவப் படுகொலைக்கெதிராக தனிச் சட்டம் கொண்டு வருவோம்' என்ற வாக்குறுதியோடு 2021 மே மாதம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஸ்டாலின், சமீபத்தில் நெல்லை கவின் ஆணவக்கொலை தமிழ்நாட்டையே... மேலும் பார்க்க

`கிட்னிகள் ஜாக்கிரதை’ டு `உருட்டு கடை அல்வா’ - சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!

சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமு... மேலும் பார்க்க

ட்ரம்ப் - புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை; அடுத்து, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவாரா ட்ரம்ப்?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றனர். அதில் முக்கிய பேசுபொருளாக ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வணிகம் இருந்துள்ளது. ட்ரம்ப் ... மேலும் பார்க்க