No Marriage: 'கென்ஸ்' இருந்தால் போதும், கணவர் வேண்டாம் - சீனாவில் வைரலாகும் வினோ...
ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதல்: "காட்டுமிராண்டித்தனமானது" - ரஷித் கான் கண்டனம்
கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல்களும், தாக்குதல்களும் நடந்து வருகின்றன.
இதனால் இரு நாடுகளுக்கிடையே பெரும் போர் நடக்கக்கூடும் அபாயம் இருப்பதால், 48 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முன்வர வேண்டும் எனக் கத்தார் நாடு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது பாகிஸ்தான்.
இந்தத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 12 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தத் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதல்; 3 கிரிக்கெட் வீரர்கள் பலி; என்ன நடந்தது?
இந்தச் சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கான், "சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆர்வமுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் உயிரைப் பறித்த ஒரு சோகம்.
பொதுமக்களின் உள்கட்டமைப்பைக் குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இந்த அநீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மனித உரிமைகளைக் கடுமையாக மீறுவதாகும், மேலும் அவை கவனிக்கப்படாமல் போகக்கூடாது.
பாகிஸ்தானுக்கு எதிராக வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை நான் வரவேற்கிறேன். இந்தக் கடினமான நேரத்தில் நான் நமது மக்களுடன் நிற்கிறேன்" என்று வருத்ததுடன் பதிவிட்டிருக்கிறார் ரஷித் கான்.