TVK : 'மீட்டிங் என்ற பெயரால் ஆக்ட்டிங்; பாஜகவின் கைப்பாவை' - தவெகவை காட்டமாக விம...
Aus vs Ind: "உடல்தகுதி அப்டேட்டை அஜித் அகார்கருக்குக் கொடுப்பது என் வேலை இல்லை" - முகமது ஷமி காட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த் நகரில் தொடங்குகிறது.
இந்தத் தொடரில் அனுபவ வீரரான முகமது ஷமி இடம் பெறவில்லை. இந்நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாகப் பேசியிருக்கும் ஷமி, "என்னை அணியில் தேர்வு செய்வது என்பது என்னுடைய கையில் இல்லை.

எனக்கு உடல் தகுதி பிரச்னை இருக்கிறது என்று நீங்கள் (பிசிசிஐ) நினைத்தால், எப்படி என்னால் பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட முடியும்.
நான் எதையும் பேச விரும்பவில்லை. நான் ஏதேனும் பேசினால், அது சர்ச்சையை உண்டாக்கும்.
நான் நான்கு நாள் நடைபெறும் ரஞ்சிப் போட்டிகளில் விளையாடினால் என்னால் கண்டிப்பாக 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும்.
இதேபோல் உடல் தகுதி குறித்து அப்டேட்டை அஜித் அகர்கருக்குக் கொடுப்பது என்னுடைய வேலை கிடையாது.
இது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள நிர்வாகிகள், மருத்துவர்கள் கொடுக்க வேண்டும். அதை அவர்கள்தான் செய்ய வேண்டும் தவிர, அது என்னுடைய பிரச்னை கிடையாது.
நான் எப்போதும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். எப்போதும் அணிக்காகச் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்யுங்கள்.

நான் தொடர்ந்து களத்தில் போராடுவேன். தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவேன்.
நான் களத்தில் நன்றாக விளையாடினால் நிச்சயம் எனக்கு நல்லது நடக்கும். எனினும் அணிக்குத் தேர்வாகுவது என்பது எனது கையில் இல்லை.
நான் போட்டியில் விளையாடுவதற்காகத்தான் தயாராக முடியும். என்னை நீங்கள் தேர்வு செய்யவில்லை என்றாலும் எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை.
நான் என்னுடைய பெங்கால் அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.