Raashi kanna: `என் நிறமற்ற இதயத்தில் வானவில் நீயடி' - ராஷி கன்னா லேட்டஸ்ட் கிளிக...
IND VS WI: 'அதிகமாக ரிஸ்க் எடுக்காமல் பொறுப்பை உணர்ந்து ஆட நினைக்கிறேன்'- சாய் சுதர்சன்
இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இரு அணிகளுக்கிடையேயான முதல்போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1- 0 கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.
இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில் வெற்றி குறித்து பேசியிருக்கும் சாய் சுதர்சன், " இங்கிலாந்தில் கடுமையாக போராடி அந்த அணிக்கு பெரும் சவாலை கொடுத்துவிட்டு, இந்தியா வந்து ஒரு தொடரை வெல்வது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.
கடந்த சில போட்டிகளாக நான் நிறைய கற்றிருக்கிறேன். இன்னும் என்னை மேம்படுத்திக் கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன்.
ஜான் கேம்பெல் ஸ்வீப் ஷாட்டை ஆட மாட்டார் என்பதில் தெளிவாக இருந்தேன்.
அதனால்தான் அத்தனை உறுதியாக ஸ்லிப்பில் நின்றேன். நம்பர் 3 பொசிசஷினில் இந்திய அணி என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன்.

அதிகமாக ரிஸ்க் எடுக்காமல் பொறுப்பை உணர்ந்து ஆட நினைக்கிறேன். கில்லுடன் நிறைய ஆடிவிட்டேன்.
அவர் கேப்டன்சி செய்யும் விதமும் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமும் அபாரம். இன்னும் நிறைய வாய்ப்புகள் எனக்கு கிடைக்குமென்று நம்புகிறேன்" என்று பேசியிருக்கிறார்.