Dude: "ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவான், ஆனா"- நெகிழும் சாய் அபயங்கர் ...
"அழகா இருக்கீங்க; புகைபிடிப்பதை நிறுத்தலாம்ல" - இத்தாலி பெண் பிரதமருக்கு துருக்கி பிரதமர் அட்வைஸ்
கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய கிழக்கில் உள்ள காசாவில் நடந்து வந்த போர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்திருக்கிறது.
ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் இருக்கும் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்துள்ளனர். டொனால்டு ட்ரம்ப் முன்வைத்த போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் குறித்துப் பேசி கையெழுத்திட டொனால்டு ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் எகிப்தில் குவிந்து இருந்தனர்.
இதில் கலந்துகொண்ட இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அனைவரையும் கவர்ந்தார். டொனால்டு ட்ரம்ப் கூட அவரிடம் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அசடு வழிந்தார்.
வந்திருந்த தலைவர்கள் மெலோனிக்கு ஆலோசனை சொல்லவும் தயங்கவில்லை. துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் இத்தாலி பிரதமர் மெலோனிக்குச் சில அறிவுரைகளை வழங்கினார்.

அனைத்து தலைவர்களும் நின்று பேசிக்கொண்டிருந்தபோது மெலோனியிடம் துருக்கி பிரதமர், "நீங்கள் புகைபிடிப்பதைக் கைவிட எதாவது வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கி வரும்போது மிகவும் அழகாக இருந்தீர்கள். ஆனால் நீங்கள் புகைப்பிடிப்பதை நான் நிறுத்துவேன்" என்று கூறினார்.
அந்நேரம் அருகில் நின்ற பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் சிரித்தபடியே அது முடியாது என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மெலோனி, ''நான் புகைப்பிடிப்பது உலக தலைவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது. புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் சமுதாய தொடர்புகள் குறைந்துவிடும்'' என்று தெரிவித்தார் .
அதற்கு, ''துருக்கியை எதிர்காலத்தில் புகைப்பழக்கம் இல்லாத நாடாக மாற்றப்போகிறேன்'' என்று துருக்கி பிரதமர் குறிப்பிட்டார். ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர்.