செய்திகள் :

'ஸ்ரீதர் வேம்பு, சிவ்நாடார்' - இந்திய ஐடி நிறுவன ஓனர்களில் No. 1 கோடீஸ்வரர் யார்? போர்ப்ஸ் தகவல்

post image

இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகள்தான் உலகம் முழுவதும் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. சேவை சார்ந்த பணிகளை இந்திய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்தியாவில் உள்ள ஐ.டி கம்பெனிகளில் எந்தக் கம்பெனி உரிமையாளர் மிகவும் பெரிய கோடீஸ்வரர் என்ற விவரத்தை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

அதில் எச்.சி.எல் நிறுவனர் சிவ்நாடார் 33.2 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் விப்ரோ நிறுவனத்தலைவர் ஆஜிம் பிரேம்ஜி இருக்கிறார். அவருக்கு 10.8 பில்லியன் டாலர் அளவுக்குச் சொத்து இருக்கிறது.

சமீபத்தில் வாட்ஸ் ஆப்பிற்கு மாற்றாக அரட்டை என்ற மொபைல் சோசியல் மீடியா செயலியை அறிமுகம் செய்த ஸ்ரீதர் வேம்பு இந்தப் பட்டியலில் 6 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஸ்ரீதர் வேம்புவின் சொத்து சமீபத்தில் கணிசமாக உயர்ந்து இருக்கிறது.

ஸ்ரீதர் வேம்பு
ஸ்ரீதர் வேம்பு

இவர் சோஹோ நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நாராயண மூர்த்திக்கு 4.6 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். அதே இன்போசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கோபாலகிருஷ்ணன் 3.7 பில்லியன் டாலருடன் 5வது இடத்தில் இருக்கிறார். மற்றொரு இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நில்கெனி 3.2 பில்லியன் டாலருடன் 7வது இடத்தில் இருக்கிறார்.

முன்னதாக போர்ப்ஸ் வெளியிட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்திருந்தார். இரண்டாவது இடத்தில் கெளதம் அதானியும், சாவித்ரி ஜிந்தால் குடும்பம் மூன்றாவது இடத்திலும், சுனில் மித்தல் நான்காவது இடத்திலும், சிவ்நாடார் 5வது இடத்திலும் இருக்கின்றனர்.

இதில் நந்தன் நில்கெனி 100வது இடத்தில் இருக்கிறார். நன்கொடைகள் வழங்குவதில் சிவ்நாடார் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2023-24ஆம் ஆண்டு 2153 கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் முகேஷ் அம்பானி இருக்கிறார். அவர் ரூ.407 கோடி கொடுத்தார்.

GST 2.0: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மத்திய, மாநில அரசுகளுக்கு நஷ்டமா? - நிபுணர் சொல்வது என்ன?

ஜிஎஸ்டி வரிஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கார்கள் வரை பலவற்றின் விலை பெருமளவில் குறைந்துள்ளது. 5, 12, 18 மற்றும் 28 சதவிகிதம் என நான்கு அடுக்குகளா... மேலும் பார்க்க