செய்திகள் :

"இன்னும் 176 நாள்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

post image

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரசார பயணத்தை மதுரையில் தொடங்கிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இரண்டாவது நாளாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.

காரைக்குடி நிகழ்ச்சியில் நயினார்

அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்க பாஜக மாவட்டத் தலைவர் பாண்டித்துரை பலவிதமான கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

நூறடி சாலையிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், "சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் வெள்ளையனை விரட்ட ஸ்ரீரங்கத்தில் ஜம்பு பிரகடனத்தை வெளியிட்டார்கள். அதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வெள்ளையருக்கு எதிராக போராடினார்கள். அதேபோல் திமுக ஆட்சியை விரட்ட செட்டிநாட்டு சீமையான காரைக்குடியில் நானும் பிரகடனம் செய்கிறேன். சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்று திரண்டு மக்கள் விரோத திமுக அரசை அகற்ற சூளுரைப்போம்.

காரைக்குடி கூட்டத்தில்

திமுக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள் அருகில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. குற்றச் சம்பவங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

அமித் ஷா திமுக-வை அழிக்க நினைக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். உங்களை அழிக்க நாங்கள் தேவையில்லை, அதை மக்களே பார்த்துக் கொள்வார்கள் என அமித் ஷா பதில் அளித்தார். அமித் ஷாவின் வியூகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்.

கரூர் சம்பவத்தில் தமிழக அரசின் மீது நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதில் அனைத்து உண்மைகளும் வெளி வரும். தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்வது உறுதி. திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கவுண்டவுன் தொடங்கி விட்டது. இன்னும 176 நாள்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்." என்றார்.

Karur Case: பில்கிஸ் பானு வழக்கு டு ஜல்லிக்கட்டு; CBI யை கண்காணிக்கும் அஜய் ரஸ்டோகி - யார் இவர்?

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பரப்புரை செய்தபோது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர்... மேலும் பார்க்க

புதுச்சேரி: இந்திரா – ராஜீவ் காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் மேம்பாலம்! - எப்போது முடியும்?

`30 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது...’சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். ஆனால் சமீபகாலமாக சுற்ற... மேலும் பார்க்க

Karur: தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு தீர்மானம் வாசிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நேற்று (அக்டோபர் 13) அறிவித்திருந்தார். அந்தவகையில் இன்று சட்டப்பேரவைக் கூட்ட... மேலும் பார்க்க

கேரளா: மத்திய அரசை விமர்சித்து பதவி விலகிய முன்னாள் ஐஏஎஸ் கண்ணன் கோபிநாதன் காங்கிரஸில் இணைந்தார்

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தாத்ரா நகர் - ஹவேலி கலெக்டராக இருந்தார். கேரளத்தில் 2018-ம் ஆண்டு மழை வெள்ள பிரளயம் ஏற்பட்டபோது மக்களோடு மக்களாக இற... மேலும் பார்க்க

திராவிட மாடலா? பழமைவாத மாடலா? - ஜி.டி.நாயுடு பாலமும் சில கேள்விகளும்!

ஜி.டி.நாயுடு மேம்பால சர்ச்சை! கோவை அவினாசியில் திறக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என தமிழக அரசு பெயரிட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி பால... மேலும் பார்க்க