செய்திகள் :

கேரளா: மத்திய அரசை விமர்சித்து பதவி விலகிய முன்னாள் ஐஏஎஸ் கண்ணன் கோபிநாதன் காங்கிரஸில் இணைந்தார்

post image

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தாத்ரா நகர் - ஹவேலி கலெக்டராக இருந்தார்.

கேரளத்தில் 2018-ம் ஆண்டு மழை வெள்ள பிரளயம் ஏற்பட்டபோது மக்களோடு மக்களாக இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். அதிகாரிகள் சிலர் அடையாளம் கண்ட பிறகுதான் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனத் தெரியவந்தது.

காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்
காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்

இந்த நிலையில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க ஆதரவு வேட்பாளர் தேர்தல் விதிமுறையை மீறியதாக நோட்டீஸ் வழங்கினார் கண்ணன் கோபிநாதன். இதன் காரணமாக அவர் தாத்ரா நகர் - ஹவேலி கலெக்டர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மின்சார வாரிய செயலர் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுச் செயலர் பொறுப்புக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் 370, 35 ஏ சட்டப் பிரிவுகளை நீக்கி மத்திய அரசு சட்டம் இயற்றியதைத் தொடர்ந்து மக்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாகக் கூறி தனது பதவியைக் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தார்.

பதவிக்கு வந்து ஏழு ஆண்டுகளே ஆன நிலையில் தனது 33-வது வயதில் ஐ.ஏ.எஸ் பொறுப்பை ராஜிநாமா செய்திருந்தார் கண்ணன் கோபிநாதன். 27 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தும் அவர் ராஜினாமா செய்த சம்பவம் அந்தச் சமயத்தில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

அதே சமயம் அரசு கொடுத்த பணிகளை அவர் உரிய காலத்தில் செய்து முடிக்கவில்லை எனவும், அதற்காக அரசு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பதில் அளிக்காமல் தப்பிப்பதற்கே ராஜினாமா நாடகம் ஆடுவதாக பா.ஜ.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ராஜினாமா செய்தபிறகு சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருந்தவர் இப்போது திடீரென காங்கிரஸில் இணைந்துள்ளார்.ஆ

கண்ணன் கோபிநாதன்
கண்ணன் கோபிநாதன்

டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார் கண்ணன் கோபிநாதன்.

கேரளாவைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அவருக்கு அடையாள அட்டை வழங்கி காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.

காங்கிரஸ் குடிமக்களுக்காக கட்சி எனவும், குடிமக்களை நோக்கி பயணிப்பதுதான் எனது லட்சியம் எனவும் கண்ணன் கோபிநாதன் தெரிவித்தார்.

கேரளா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் காங்கிரஸில் இணைந்துள்ளார். அவருக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Karur: தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு தீர்மானம் வாசிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நேற்று (அக்டோபர் 13) அறிவித்திருந்தார். அந்தவகையில் இன்று சட்டப்பேரவைக் கூட்ட... மேலும் பார்க்க

திராவிட மாடலா? பழமைவாத மாடலா? - ஜி.டி.நாயுடு பாலமும் சில கேள்விகளும்!

ஜி.டி.நாயுடு மேம்பால சர்ச்சை! கோவை அவினாசியில் திறக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என தமிழக அரசு பெயரிட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி பால... மேலும் பார்க்க

இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்: "பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கிறீர்களா?" - ட்ரம்ப்பின் பதில் என்ன?

இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்த 20 அம்சங்களை இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, நேற்று எகிப்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. பாலஸ்தீன... மேலும் பார்க்க

Gaza: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்; "இது எளிதானது அல்ல" - ட்ரம்பைப் பாராட்டும் ஜோ பைடன்

இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் எகிப்தில் கையெழுத்தானது. இதனைப் பாராட்டி அமெரிக்காவின் முன்னாள் அதிப... மேலும் பார்க்க