Karur: தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு தீர்மானம்...
இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்: "பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கிறீர்களா?" - ட்ரம்ப்பின் பதில் என்ன?
இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்த 20 அம்சங்களை இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, நேற்று எகிப்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
பாலஸ்தீனத்திற்கு நாடு அங்கீகாரம்?
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், அமெரிக்கா கிளம்பிய ட்ரம்பிடம், 'பாலஸ்தீனத்தை நீங்கள் ஒரு நாடாக அங்கீகரிக்கிறீர்களா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.

"ஒரு நாடா... இரண்டு நாடா என்பது குறித்து பேசவில்லை. நாங்கள் காசாவை மறுகட்டமைப்பது குறித்துப் பேசுகிறோம்.
பலர் ஒரு நாடு தீர்வை விரும்புகிறார்கள். சிலர் இரு நாடு தீர்வை விரும்புகிறார்கள். அது குறித்து பார்க்க வேண்டும். ஆனால், நான் எதுவும் அது குறித்து தெரிவிக்கவில்லை" என்று பதிலளித்திருக்கிறார்.
ஆனால், அவர் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது குறித்து எந்தக் கருத்தையுமே நேரடியாகத் தெரிவிக்கவில்லை.
20 அம்சங்களில்...
மேலே கூறப்பட்டுள்ள ட்ரம்பின் 20 அம்சங்களில், "காசா மறுகட்டமைக்கப்பட்டவுடன், பாலஸ்தீனம் வெற்றிகரமாகச் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னர், பாலஸ்தீனத்திற்கு நாடு என்கிற அந்தஸ்து வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.