செய்திகள் :

Dude: 'எதுவுமே எனக்கு வொர்க் அவுட் ஆகவில்லை என்றால்.!' - உருவக்கேலி குறித்து பிரதீப் ரங்கநாதன்

post image

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார்.

ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது.

 `டூட்' படம்
`டூட்' படம்

அதில் பேசிய பிரதீப் ரங்கநாதன், " `டூட்' படம் நன்றாக வந்திருக்கிறது. எங்கள் எல்லோருக்கும் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ரொம்ப ஜாலியான படம். ஃபேமிலி எல்லாம் சேர்ந்து பார்க்கக்கூடிய படம். 'எல்.ஐ.கே' , 'டூட்' இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவராதது இரண்டு படங்களுக்குமே நல்லதுதான். அப்படி வெளியாகி இருந்தால் இரண்டு படங்களின் கலெக்ஷனும் பாதிக்கப்பட்டிருக்கும்" என்றிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து பிரதீப்பை உருவக்கேலி செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " உருவக்கேலி செய்வது எல்லாம் என்னை பெரிதாக பாதிக்காது.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

எனக்கு முன்னாடி மக்களுடைய அன்பு இருக்கும்போது நான் ஏன் உருவக்கேலி பற்றி யோசிக்கணும்.

எதுவுமே எனக்கு வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் நான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படலாம்.

ஆனால் மக்கள் எனக்கு நிறைய அன்பு தருகிறார்கள். அதனால் இது ஒரு விஷயமே கிடையாது" என்று பேசியிருக்கிறார்.

Dude: "நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லையே"- பிரதீப்பைச் சீண்டிய கேள்வி; சரத்குமாரின் பளீச் பதில் என்ன?

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியிருக்கும் படம் டுயூட். இந்தப் படத்தில் சரத்குமார், மமிதா பைஜு, ஹிருது ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் ஆகியோர் முக்கிய வ... மேலும் பார்க்க

``சேது படம் அப்போ அந்த ரெண்டு பேருக்கு ரசிகர்கள் கூடிட்டே இருந்தாங்க; அப்போ விக்ரம் கிட்ட" - அமீர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் விக்ரம் மகன் துருவ், அனுபமா, ரஷிஜா, பசுபதி, லால், அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பைசன்' திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.இப்படம் தீ... மேலும் பார்க்க

"உச்சத்துக்குப் போகனும்" - மாரி செல்வராஜின் 'பைசன்' பட ட்ரெய்லர்

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் வரும் அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா... மேலும் பார்க்க

Dude: நாம வேணாம் சொல்லியும்... - டூட் படம் பற்றி பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

Dude: "உங்களில் ஒருவராக என்னைப் பார்க்கிறீர்கள்; அதற்கு நன்றி" - ரசிகர்கள் குறித்து மமிதா பைஜூ

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் ... மேலும் பார்க்க