செய்திகள் :

``சேது படம் அப்போ அந்த ரெண்டு பேருக்கு ரசிகர்கள் கூடிட்டே இருந்தாங்க; அப்போ விக்ரம் கிட்ட" - அமீர்

post image

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் விக்ரம் மகன் துருவ், அனுபமா, ரஷிஜா, பசுபதி, லால், அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பைசன்' திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

மாரி செல்வராஜ் - பா. ரஞ்சித்
மாரி செல்வராஜ் - பா. ரஞ்சித்

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும், நடிகருமான அமீர், ``ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் தங்களின் படைப்புகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.

அதற்கு என்னைப் போன்றவர்கள் உறுதுணையாக பக்க பலமாக இருப்போம். யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.

உங்களுக்கெல்லாம் இந்த துருவ்-ஐ எப்போ தெரியும்னு தெரியல, நான் 1999-ல வீட்ல சின்ன வயசுல பார்த்தேன்.

அவரோட அப்பாவும் (விக்ரம்) நானும் நெருங்கிய நண்பர்கள். அது யாருக்குமே தெரியாது. அத பத்தி எங்கேயும் நாங்க பேசிக்கிட்டது கிடையாது.

அவரோட உழைப்பை பக்கத்துல இருந்து பார்த்தவன் நான். சேது பட பூஜைல இருந்து ரிலீஸ் வரைக்கும் கூட இருந்து பார்த்தவன்.

அமீர்
அமீர்

சேது வெற்றிக்குப் பிறகும் கூட இருந்து பார்த்தவன். அப்போ துருவ்-க்கு ரெண்டு வயசு இருக்கும். எதையாவது கேட்டு அடம்பிடிச்சிட்டே இருப்பாரு. நான்தான் கடைக்கு தூக்கிட்டு போவேன்.

அதுக்கு அப்றம், பைசன்-ல ஒருநாள் பார்க்கும்போது, சேது-ல எப்படி விக்ரம் பாத்தேனோ அப்டியே இருந்தது.

விக்ரம் நிறைய போராடித்தான் இந்தத் துறைக்குள்ள வந்திருக்காரு. நிறைய அவமானப்பட்டிருக்காரு. அது உங்களுக்கெல்லாம் தெரியாது, எனக்கு தெரியும்.

யார் அவரை அவமானப்படுத்தியது, அவர்களெல்லாம் இன்னைக்கு என்ன நிலையில இருக்றாங்க என்றதெல்லாம் எனக்கு தெரியும்.

சேது படம் அப்போ ஷூட்டிங் ஸ்பாட்ல கேட்டுட்டே இருப்பாரு, `நான் நல்லா வருவேனா-ன்னு'. சேது படம் எடுத்த பிறகு ரிலீஸ் பண்ண முடியல. அப்பவும் போராடிகிட்டு இருந்தாரு.

துருவ் விக்ரம்
துருவ் விக்ரம்

அந்த இடைப்பட்ட காலத்துலகூட பிரபுதேவாவுக்கு ஒரு படத்துல டப்பிங் பண்ணிட்டு வந்தாரு. ஒரு டெலிவிஷன் சீரியல் பண்ணனும்-னு நானும் அவரும் எழுதிட்டு இருந்தோம்.

அப்போ அவர்கிட்ட சொன்னேன், `நீங்க அழகா யூத்தா இருக்கீங்க, நல்லா நடிக்றீங்க. அஜித், விஜய்-க்கு ரசிகர்கள் கூடிக்கிட்டே இருக்காங்க.

அவங்க ரெண்டு பேரும் எதிர்காலத்துல என்ன நிலையில இருப்பாங்கனு தெரியல.

ஆனா, ஒன்னு சொல்றேன் நீங்க கடைசி வரைக்கும் சினிமாவுல இருப்பீங்க. சினிமா வேணாம்னு நீங்க ஒதுங்குனாவே தவிர, சினிமா உங்கள ஒதுக்கவே முடியாது. அப்படிப்பட்ட நடிகர் நீங்க அதுல சந்தேகமே இல்ல' என்றேன்.

அமீர்
அமீர்

சினிமாவுல நான் பார்த்து வியந்த டெடிகேஷன் விக்ரம்தான். ரஞ்சித்துக்கு அது நல்லாவே தெரியும்.

நாம ஜெயிக்கணும்னு அவருக்கு ஒரு வெறி இருந்துச்சு. ஆனா, துருவ்-க்கு அது தேவையில்ல.

ஏன்னா, அப்பா பெரிய ஸ்டார். ஆனா, துருவ் கிட்டயும் அது இருக்றத நான் பார்த்தேன். விக்ரம்-கு பிதாமகன்ல கிடைச்சது, துருவ்-க்கு இந்த படத்துல கிடைச்சிருக்கு" என்று கூறினார்.

"உச்சத்துக்குப் போகனும்" - மாரி செல்வராஜின் 'பைசன்' பட ட்ரெய்லர்

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் வரும் அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா... மேலும் பார்க்க

Dude: நாம வேணாம் சொல்லியும்... - டூட் படம் பற்றி பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

Dude: "உங்களில் ஒருவராக என்னைப் பார்க்கிறீர்கள்; அதற்கு நன்றி" - ரசிகர்கள் குறித்து மமிதா பைஜூ

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

Dude: 'மமிதா பைஜுவுடன் 'லவ் டுடே' படத்திலேயே நடிக்கலாம்னு நினைச்சேன், ஆனா' - பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

Bison: ``அவ்வளவுதான் நம் வாழ்க்கை என நினைத்தேன்" - மேடையில் கலங்கிய ரஜிஷா விஜயன்!

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி... மேலும் பார்க்க