செய்திகள் :

"சாமானியர்கள் அரசியலுக்கு வந்தால் இதுதான் நிலைமை" - தவெக நிர்மல்குமார் பேட்டி

post image

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்திருந்தது. உயர் நீதிமன்றம் அஸ்ரா கார்க் தலைமையில் காவல்துறையின் SIT குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

ஆனால், இந்த கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றச் சொல்லியும் எஸ்.ஐ.டி விசாரணைக்கு தடை கோரியும் தவெக தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

 Karur சம்பவம்: CBI விசாரணை; உயர் நீதிமன்றத்துக்கு கண்டனம்! - Supreme Court | TVK DMK |Imperfect Show
Imperfect Show

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றிருக்கும் தவெக விஜய், "நீதி வெல்லும்" என ஒற்றைச் சொல்லில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜய்யை சந்தித்துவிட்டு வந்த தவெக மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், "இது மக்களுக்கான தீர்ப்பு. 41பேர் இந்த விஷியத்தில் இவ்வளவு மோசமான அரசியலை செய்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

எங்கள் கட்சியில் தலைவர் விஜய் உட்பட எல்லாரும் சாமானியர்கள். சாமானியர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தவெக நிர்மல்குமார்
தவெக நிர்மல்குமார்

இந்த துயர சம்பவத்தில் எவ்வளவு கட்டுக்கதைகள், வெறுப்புகளை இந்த திமுக அரசு பரப்பியது என்று மக்களுக்குத் தெரியும். உண்மை வெளிச்சத்திற்கு வரும், தமிழக மக்களுக்கு நடந்த உண்மை விரைவில் தெரிய வரும். விரைவில் விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்துவோம்" என்று கூறியிருக்கிறார்

`நீதிபதி குறித்து அவதூறு பதிவு' - தவெக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கைது

தமிழக வெற்றி கழகத்தின் கரூர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை... மேலும் பார்க்க

கோவை: புதிய பாலம் திறந்த முதல் நாளிலேயே பயணிக்க ஆர்வம்; போக்குவரத்து நெரிசல்! | Photo Album

போக்குவரத்து ஸ்தம்பிப்புபுதிய பாலத்தில் வாகன போக்குவரத்து போக்குவரத்து ஸ்தம்பிப்புபோக்குவரத்து ஸ்தம்பிப்புபோக்குவரத்து ஸ்தம்பிப்புபோக்குவரத்து ஸ்தம்பிப்புபோக்குவரத்து ஸ்தம்பிப்புபோக்குவரத்து ஸ்தம்பிப்... மேலும் பார்க்க

பல்லாயிரம் கோடிகளில் முதலீடு... வளரும் தமிழ்நாடு... தேயும் சுற்றுச்சூழல்..!

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்... தூத்துக்குடியில் கார் தொழிற்சாலை... 10,000 கோடி முதலீடு... 20,000 கோடி முதலீடு... தமிழ்நாடுதான் இந்தியாவின் டெட்ராய்... மேலும் பார்க்க

ஹரியானா: ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை; காவல்துறையில் சாதிய ஒடுக்குமுறைகள்; அதிர்ச்சிப் புகார்!

Aஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், சண்டிகரில் உள்ள தனது செக்டார் 11 இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்காவல்துறையை உலுக்கியிருக்கிறது. 2001ஆம் ஆண்... மேலும் பார்க்க

'திண்டுக்கல்லில் சில பணிகளில் தொய்வு இருக்கிறது' - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் ... மேலும் பார்க்க