செய்திகள் :

திருமணத்தை நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த சீனப்பெண் - என்ன நடந்தது?

post image

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம் இருந்து 'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து 200,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23 லட்சம்) வரதட்சணை பெற்றுள்ளார்.

chinese wedding
chinese wedding

ஆனால், திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ’அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய விரும்பவில்லை' என்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

மாப்பிள்ளைக்கு வருமானம் மிகவும் குறைவு, அவர் மிகவும் நேர்மையானவர் என்பதால் அந்தப் பெண் திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரதட்சணை பணத்தை மாப்பிள்ளை வீட்டார்கள் திருப்பிக் கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண் 200,000 யுவானில் இருந்து 30,000 யுவான் (சுமார் ரூ. 3.5 லட்சம்) பிடித்துக் கொண்டு மீதமுள்ள யுவானைத் தான் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார்.

chinese wedding
chinese wedding

'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' மற்றும் இதர செலவுகளுக்காக அந்தத் தொகையை எடுத்துக்கொள்ளப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

அதாவது திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது, புகைப்படக்காரர் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கச் சொன்னதால் மட்டுமே மாப்பிள்ளை அப்பெண்ணைக் கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இறுதியில் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பெண் 170,500 யுவானை (சுமார் ரூ. 20 லட்சம்) மாப்பிள்ளை வீட்டாரிடம் திருப்பித் தர ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மாப்பிள்ளையிடம் இருந்து 'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சிறுவனுக்கு ரூ.24,000-க்கு சைக்கிள் பரிசளித்த அமெரிக்க யூடியூபர் - நெகிழ்ச்சியான சம்பவம்

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியும் யூடியூபருமான ஜெ என்பவர் , இந்திய சிறுவன் ஒருவனுக்கு புதிய சைக்கிளைப் பரிசளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது நேரலை வீடியோவின்போது சந்தித்த ச... மேலும் பார்க்க

``20 ஆண்டுகள் பிள்ளையைப்போல் வளர்த்தேன்'' - வெட்டப்பட்ட அரசமரத்தைப் பார்த்து கதறியழுத மூதாட்டி

ஒரு மரக்கன்றை நட்டு, அதனை மரமாக வளர்த்து பெரியதாக மாற்ற பல ஆண்டுகள் பிடிக்கும். 10 ஆண்டுகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே மரக்கன்று ஓரளவு பெரிய மரமாக மாறும்.அவ்வாறு ஆசையாக வளர்த்த மரத்தை யாராவது வெட்டின... மேலும் பார்க்க

``முதலில் மோசடி கால் என நினைத்தேன், ஆனால்" - லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு வென்ற மூதாட்டி

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்திருப்பதாக வந்த ஃபோன் காலை முதலில் மோசடி அழைப்பு என நினைத்து புறக்கணித்திருக்கிறார். அதன் பின்னர் உண்மை என அறிந்ததும... மேலும் பார்க்க

Laurence Watkins: 2,253 வார்த்தைகளைக் கொண்ட பெயரால் உலக சாதனை படைத்த நபர்; பின்னணி என்ன?

நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்பவர் தனது பெயரில் 2,253 வார்த்தைகளைச் சேர்த்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.இந்தியாவை என்று எடுத்துக்கொண்டால் தந்தையின் பெயருடன், குழந... மேலும் பார்க்க

சீனா: திருமணத்திற்கு வந்த தோழிகளை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட நபர்கள்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சீனாவில் நடந்த திருமணம் ஒன்றில் மணப்பெண்ணின் தோழிகளை முன் பின் தெரியாத நபர்கள் கட்டாயப்படுத்தி முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது போன்ற கொடூர செயல்கள், திருமணக் குறும்பு என்ற ... மேலும் பார்க்க

``நீங்க நல்லா சமைப்பீங்கனு தெரியும், ஆனா இந்த ஷோல'' - ட்ரோல் செய்யப்பட்ட கனிக்கு பிக்பாஸ் அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் நபர்களை இறக்கியுள்ளனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது வ... மேலும் பார்க்க