திருமணத்தை நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த சீனப்பெண...
``இந்தியை இப்படித்தான் கற்றுக் கொண்டேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் ஷேரிங்ஸ்
தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ரஹ்மானின் முதல் படமான ரோஜா பட ஹிட்டிற்குப் பிறகே, ஏகப்பட்ட இந்திப் பட வாய்ப்புகள் ரஹ்மானுக்குக் கிடைத்தன. உடனே 'ரங்கீலா' இந்திப் படத்திற்கு இசையமைத்தார்.
இந்தி மொழி கற்றுக்கொள்ளாத அந்த சமயத்தில் பாடல்கள் வரிகளை மொழிபெயர்ப்பதில் இருக்கும் சிக்கல்களால் இந்திப் படத்திற்கு இசையமைப்பதைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டார்.
அதன்பிறகு மூன்று ஆண்டுகளில் இந்தியைக் கற்றுக்கொண்ட ரஹ்மான், இந்தி திரையுலகில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து இந்திப் படமான 'Slumdog Millionaire' படத்திற்காக ஆஸ்கர் விருதுவரை வென்றார். இப்போது இந்தியில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது NDTV செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் கொடுத்திருக்கும் ரஹ்மான், இந்தி மொழியைக் கற்றுக் கொண்டது குறித்து தொகுப்பாளராக கேள்வி கேட்டிருக்கும் ஸ்ருதி ஹாசனுக்குப் பதிலளித்திருக்கிறார்.
அதில், "ஆரம்ப காலங்களில் என்னுடைய தமிழ் பாடல்கள் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. ஆனால், தமிழ் பாடல் வரிகளை அப்படியே இந்தியில் மொழிபெயர்க்கும்போது அதன் அர்த்தங்கள் மாறுதலும், ராக தாளத்தில் சேராத சிக்கல்களும் இருந்தன."
இந்தி ஆடியன்ஸ் என்னுடைய பாடல்கள் இந்தியில் கேட்கப் பிடிக்காமல், தமிழிலேயே கேட்டனர். இந்தி படங்களைப் பண்ணும்போதும் எனக்கு இந்த சிக்கல்கள் இருந்தன. அப்போது எனக்கு சரியாக இந்தி தெரியாததால் இந்தி படங்களுக்கு இசையமைப்பது, பாடல்களை மொழிபெயர்ப்பது சிக்கலாக இருந்தது.
அப்போது இந்தி இயக்குநர் சுபாஷ் காய், என்னிடம், 'நீங்க ரொம்ப நல்ல இசையமைப்பாளர். இந்தி தெரியாமல், இந்தி பாடல்களுக்கு இசையமைக்க முடியாது, பாலிவுட்டில் நிலைத்து இருக்க முடியாது' என்றார். அது ஒரு நல்ல அறிவுரையாகத் தெரிந்தது.

அதனால், சரி இந்தி கற்றுக்கொள்ளலாம் என உருது மொழி குரானை 1994 முதல் 1997ஆம் ஆண்டுகளில் 3 ஆண்டுகள் படித்தேன்.
இந்தியும், உருதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். உருது எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்பதால் உருதைக் கற்றுக்கொண்டு, அதன்மூலம் இந்தியைக் கற்றுக் கொண்டேன்.
அதன்பிறகு தமிழ் பாடல்களை இந்தியில் அப்படியே மொழிபெயர்க்காமல், புதிதாக இந்தியிலேயே பாடல்வரிகளை எழுதினோம்.
பஞ்சாபி கூட கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இசைக்கு மொழி இல்லை, ஆனால் பாடல் வரிகளுக்கு மொழி இருப்பதால் அதைக் கற்றுக்கொள்ளும் தேவை ஏற்படுகிறது.
எல்லா மொழியையும், எல்லா கலாசாரத்தின் மீதும் மரியாதை இருக்கிறது." என்று பேசியிருக்கிறார்.