திருமணத்தை நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த சீனப்பெண...
ஜஸ்ட் ஒன் கால் ப்ளீஸ்! - திடீரென வரும் விருந்தாளிகளுக்கு சமர்ப்பணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தற்போது நாம் அனைவருமே ஒரு பரபரப்பான அவசரமான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .
அப்படி இருக்கையில் உறவினர்களின் திடீர் வருகை.. அசௌகரியங்களை உண்டு பண்ணுகிறது.
இன்ப அதிர்ச்சி கொடுக்கலாமென்ற நோக்கத்தில் வீட்டிற்கு வரும் உறவுகளால், உறவினர்களுக்கு 'பிபி' ஏற்படுவது தான் நிஜம்.
விருந்தினர்கள் திடீர் (அழையா) விருந்தாளியாக வருவதில் சில பல சிக்கல்கள் எழுகிறது
*உறவினர்கள் ஏதாவது நிகழ்விற்குச் செல்வதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் திடீர் விருந்தாளிகளின் வருகை .. இருபாலருக்குமே தொந்தரவு .
*அது மட்டும் இல்லாமல்.. சாப்பிட வெளியில் போகலாம் என்று திட்டமிட்டு இருக்கையில் ,
உறவுகளின் வருகையினால் தடைபட... பிள்ளைகள் கோபமாக... வருத்தத்தில் நாம அசடு வழிய தர்ம சங்கடம் தானே!
*சில நேரங்களில் உறவினர்கள் வீட்டுப் பெரியவர்களுக்கு (திடீரென )உடல் நலக் குறைவு ஏற்பட ..
மருத்துவமனைக்கும், வீட்டுக்கு அல்லாடறப்ப .
விருந்தாளிகளின் தீடீர் வருகை ... இன்னலை உண்டாக்கி விடும்.
*ஐடியில் பணிபுரிபவர்கள்பலரும் வாரத்தில் ஐந்து நாட்கள்' மாங்கு மாங்கு' ன்னு வேலை செஞ்சிட்டு..
சனி, ஞாயிறுகளில்' அவர்களின் தனிப்பட்ட வேலைகளைச் செய்யலாம்ன்னு திட்டமிட்டு இருப்பார்கள்.
அப்ப உறவுகள் தீடிரென வந்தால்... விருந்தோம்பல் கிடைக்குமா? மகிழ முடியுமா?
யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா?!

எனது பெயரன் பிறந்திருந்த நேரம்.. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த அரை மணி நேரத்தில் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் உறவினர்களின் வருகை... கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் .ஒரு புது வரவு வீட்டிற்குள் வந்திருக்கிறது.
அந்த சூழலில்...வந்த உறவுகளை கவனிப்பதா? இல்லை மருமகளுக்கும் பேரனுக்கும் தேவையானதைச் செய்வதா?? ஒரு சில நிமிடம் தவித்துப் போய் விட்டேன் .
அவர்கள் என்னவோ'எங்களுக்கு எதுவும் வேணாம் குழந்தையை பார்க்கத்தான் வந்தோம் 'ன்னு கூலாக சொல்றாங்க ... ஆனா எனக்கு கையும் ஓடல காலும் ஓடல? குழந்தை பிறந்த வீட்ல முன்கூட்டியே சொல்லிட்டு வரணும்ன்ற ஒரு அடிப்படை எண்ணம் கூட இல்லையேன்னு கோபம்' சட்' னு வந்தது. ஆனால் கோபத்தை முகத்தில் காண்பிக்காமல் வறட்டு புன்னகையுடன் சமாளித்து அனுப்பியது வேறு கதை
உறவினர்களின் வருகை என்பது மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விஷயமாக இருக்க வேண்டும் . 'ஏண்டா இவர்கள் வந்தார்கள்' என்று வருத்தப்பட வைக்க கூடாது.
இன்னல்களுக்கு உள்ளாக்கிடவும் கூடாது.
திடீரென்று ஒருவர் வீட்டிற்கு போகும் போது அவர்கள் நன்கு கவனித்தாலும் அவர்கள் சமைத்தஉணவு விருந்தினரின் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லைன்னா... அவ்வளவுதான் என் பையனுக்கு இதெல்லாம் பிடிக்காது ன்னு சொல்லிடறாங்க.. அப்ப உறவினர்களின் முகம் வாடிடுது.
இதையெல்லாம் தவிர்க்கணும்னா முன்கூட்டியே உறவுகளுடன் அலைபேசியில் உரையாடுவது நல்லது.. இப்படி நிறைய நிறைய நிறைய விஷயங்கள் விருந்தோம்பலில் இருக்கத்தான் செய்கிறது.

இப்ப எல்லாம் உறவினர்கள் வீட்டுக்குப் போனா.. அவங்க நல்ல கவனிக்கணும்னு எதிர்பார்க்கிறவங்கத்தான் நிறையப்பேர்.
அப்படி எதிர்பார்க்கிறவங்க ..குறிப்பிட்ட விருந்தினர் வீட்டுக்கு போறப்போ முன்கூட்டியே சொல்லிட்டு போறதுதானே முறை என்பதை மறந்து விடுகிறார்கள்.
முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் இருந்தது போல் இப்போது இல்லை. எல்லார் கையிலும் அலைபேசி இருக்கிறது. குறிப்பிட்ட உறவினர் வீட்டிற்கு செல்லும் போது முன்கூட்டியே அழைத்து இந்த நேரத்தில் இந்த தேதியில் வரலாமா?
வருகை இடைஞ்சலாக இருக்குமா? உங்களுக்கு ஏதேனும் வேலைகள் இருக்கிறதா? இப்படி கேட்டு விட்டு செல்வதுதானே முறை. அப்பத்தான் உறவினர்கள் முகமலர்ச்சியுடன் பேசுவார்கள் .
மற்றவர்களை மகிழ்வித்த தருணங்கள் மட்டுமே
நாம் மனிதராக வாழ்ந்ததற்கான நேரங்கள்' ன்னு சொல்வாங்க.
சிரிப்பு +பேச்சு+ ,கலகலப்பு உறவின் பிணைப்பை வலுவாக்கும்.
பழைய நினைவுகள் புதுப்பிக்கப்படும். சுவையான உணவு,
இதமான சூழ்நிலை..
பேசி மகிழ்ந்த
சிரித்து மகிழ்ந்த
தருணங்கள் என்றும் மறவாமல் இருக்கும்.
மோப்பக் குழையும் அனிச்சம்
முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்றார் திருவள்ளுவர்.
அனிச்சம் பூ முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல சற்று முகம் கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடி விடுவர்.
இந்த அசௌரியத்தை உறவுகளுக்கு கொடுக்கணுமா யோசியுங்கள். ஜஸ்ட் ஒன் கால்..
பிரச்னைகளுக்கு
'பை பை'
சொல்லுங்கள்
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.