``இந்தியை இப்படித்தான் கற்றுக் கொண்டேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் ஷேரிங்ஸ்
Dude: 'மமிதா பைஜுவுடன் 'லவ் டுடே' படத்திலேயே நடிக்கலாம்னு நினைச்சேன், ஆனா' - பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார்.
ரோகினி, சரத்குமார் ஆகியோர் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 13) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், " இந்தப் படத்தில் நடிக்க ஓகே சொன்ன சரத்குமார் சாருக்கு நன்றி. நான் பார்த்து வளர்ந்த நடிகர் கூட நடிக்கிறதுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. நன்றி சார்.
மமிதா பைஜுவுடன் 'லவ் டுடே' படத்திலேயே நடிக்கலாம் என்று முயற்சி எடுத்தேன். அப்போது அவர் 'வணங்கான்' படத்தில் நடிக்கிறதாக இருந்தார்.
அதனால் அது கை கூடவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி.
அதேபோல், படத்தில் நான் டிராவிட் உடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.
ஒவ்வொரு படமும் பண்ணும் போது அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுப்பேன்.
ஆனால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இப்படி இருக்கும்போது, இந்த படத்தில் டிராவிட் உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேபோல் படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகர் ஹிருது ஹாரூன். வழக்கமாக ஒரு படத்தில் மற்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் போது, படம் முடியும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம்.
ஆனால் ஹிருது ஹாரூனுடன் அப்படி நடக்கவில்லை. ஒரு ஆக்ஷன் காட்சியில் நான் அவருக்கு வலிக்கும் அளவுக்கு அடித்துவிட்டேன்.
இது மட்டும் இல்லாமல், அவரை அடித்து விட்டு, அவருக்கு வலிக்கிறது என்று தெரியாமல் அவரைப் பார்த்து சிரித்தும் விட்டேன். அன்று முதல் மனதிற்குள் மிகவும் சங்கடமாகவும் குற்ற உணர்வாகவும் இருந்து கொண்டே இருந்தது.
எப்போது அவரைப் பார்த்தாலும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். தெரியாமல் காயப்படுத்திவிட்டால் மன்னித்து விடுவார்கள்.
ஆனால் வலியில் இருப்பவர்களைப் பார்த்து சிரித்தால் மன்னிக்க மாட்டார்கள். ரொம்ப சாரி ஹிருது " என்று பேசியிருக்கிறார்.