செய்திகள் :

``பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" - விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

post image

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, அஞ்சாரியா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

இத்தகைய உத்தரவைத் தொடர்ந்து வி.சி.க எம்.பி ரவிக்குமார், ``பா.ஜ.க நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" என்று விமர்சித்திருக்கிறார்.

கரூர் நெரிசல் வழக்கு
கரூர் நெரிசல் வழக்கு

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்வீட்டில் ரவிக்குமார், ``விஜய் தரப்பின் மனு மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பா.ஜ.க-வின் பிடியில் விஜய் சிக்கிக்கொண்டுவிட்டார் என சமூக ஊடகங்களில் பலர் பதிவிடுவதைப் பார்க்கிறேன்.

நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்ததே பா.ஜ.க சொன்னதால்தான் என முன்பிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம்.

தி.மு.க-வுக்குச் செல்லும் சுமார் 14 சதவிகித மதச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து தி.மு.க-வுக்குப் பெரும்பான்மை கிடைக்க விடாமல் செய்வது, அதன் பின்னர் மகாராஷ்டிரா மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பா.ஜ.க-வின் திட்டம்.

அதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பவர்தான் விஜய். பா.ஜ.க-வை கொள்கை எதிரி என்பதும், தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் ரகசிய உறவு இருக்கிறது எனக் கூறுவதும்; காங்கிரஸ் கட்சியோடு தான் நெருக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் (இதற்குக் காங்கிரஸ் மேலிடத்தில் சிலர் இடமளிப்பது வேதனையானது) சிறுபான்மையினரிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் கையாளும் தந்திரங்கள்.

பா.ஜ.க அணியில் அவர் சேர்ந்துவிட்டால் இந்த தந்திரங்கள் பலிக்காமல் போய்விடும். அதுமட்டுமின்றி அ.தி.மு.க வாக்கு வங்கியும் காப்பாற்றப்பட்டு அதை பலவீனப்படுத்துவது என்ற பா.ஜ.க - விஜய் நோக்கமும் தோற்றுவிடும்.

எனவே, பா.ஜ.க அணியில் அவரைச் சேர்க்காமல் தனித்து நிற்க வைத்து தேர்தலுக்குப் பிறகு அவரது ஆதரவைப் பெறவே பா.ஜ.க திட்டமிடும் எனக் கருதுகிறேன்.

பா.ஜ.க-வினர் நடத்தும் அரசியல் நாடகத்தில் அவர்கள் எழுதித்தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர்தான் விஜய். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! - நடவடிக்கையா, நாடகமா?

காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவி ஒருவர், தன்ன... மேலும் பார்க்க

சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. ஏன்? கடந்த 9-ம் தேதி, ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய ஐந்து கனிமங்களை ஏற்றுமதி செ... மேலும் பார்க்க

கூட்டணிக்கு வலுசேர்க்கும் சகோதரர்கள்? - உத்தவ் இல்ல விருந்தில் குடும்பத்தோடு பங்கேற்ற ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா 2023-ம் ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர்.... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் வழக்கு: "இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்" - திமுக எம்.பி வில்சன்

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க... மேலும் பார்க்க

கோவை: களமிறங்கிய சின்னத்தம்பி - மீண்டும் தொடங்கிய `ரோலக்ஸ்’ யானை ஆபரேஷன்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். முக்கியமாக நரசீபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதம... மேலும் பார்க்க

'கரூர் சிபிஐ விசாரணை ஸ்டாலினுக்கு பெரிய அடி' - வானதி சீனிவாசன்

கோவை புலியகுளம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு எதிரான மாடலாக இருக்க... மேலும் பார்க்க