செய்திகள் :

Ranbir Kapoor: "நான் நெப்போட்டிசம் மூலம் வந்தவன்" - பாலிவுட் ஸ்டார் ரன்பீர் கபூர் ஓபன் டாக்

post image

இந்திய சினிமாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து திரைத்துறைகளிலும் ஒத்துப்போகக்கூடிய, அதேசமயம் விவாதத்துக்குரிய விஷயம் நெப்போட்டிசம் (Nepotism).

எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவர் சினிமாவில் ஒரு சிறிய வாய்ப்பாவது கிடைத்துவிடாதா என்று வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வருடக்கணக்கில் உழைத்துக் காத்திருப்பதும், மறுபக்கம் தனது குடும்பத்தில் இருப்பவர்கள் அதே சினிமாவில் இயக்குநராகவோ, தயாரிப்பாளராகவோ, ஹீரோவாகவோ, இசையமைப்பாளராகவோ, பாடகராகவோ இருப்பதாலேயே ஒருவர் எளிதில் ஹீரோ முதல் எந்தவொரு வாய்ப்பையும் எளிதாகப் பெறுவதும் நீண்ட காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சினிமா
சினிமா

அப்படி எளிதாகக் கிடைத்த வாய்ப்பில் அவர் வெற்றி பெற்றாரா அல்லது போராடி வெற்றிபெற்றாரா அல்லது வெற்றியைத் தக்கவைக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

சினிமாவில் ஒருவர் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருப்பதற்கும், இன்னொருவருக்குத் தோற்றுக்கொண்டே இருந்தாலும் வெற்றிபெறும் வரை வாய்ப்பு கொடுக்கப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

பிற துறைகளில் இந்த நெப்போட்டிசம் இல்லையா என்றால் அதை மறுத்துவிடவும் முடியாது. அதுவும் விவாதத்துக்குரியதுதான்.

இந்த நிலையில், இந்தி சினிமாவின் மறைந்த பழம்பெரும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற முகங்களைக் கொண்டவர் ராஜ் கபூர். அவரின் பேரனும், சினிமாவில் அவரைப்போலவே பன்முகம் கொண்ட மறைந்த ரிஷி கபூரின் மகனுமான ரன்பீர் கபூர், தான் நெப்போட்டிசம் மூலம் வந்தவன் என்றும், வாழ்க்கை தனக்கு எளிதாகக் கிடைத்ததாகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

ராஜ் கபூர், குரு தத் ஆகியோர் பற்றிய நிகழ்ச்சியொன்றில் பேசிய ரன்பீர் கபூர், "நான் நெப்போட்டிசம் மூலம் வந்தவன். வாழ்க்கை எனக்கு எளிதாகக் கிடைத்தது. ஆனால், எப்போதும் நான் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்

ஏனெனில் நான் இதுபோன்ற குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதையும், எனக்கென்று தனிப்பட்ட பாணியை உருவாக்கவில்லையென்றாலோ, எனக்கென்று ஒரு பெயரை உருவாக்கவில்லையென்றாலோ திரைத்துறையில் நான் வெற்றிபெற முடியாது என்பதையும் நான் உணர்ந்தேன்.

என் குடும்பத்தின் நிறைய வெற்றிகளைத்தான் நீங்கள் கொண்டாடுகிறீர்கள். ஆனால், தோல்விகளும் நிறைய இருக்கின்றன.

வெற்றியிலிருந்து எவ்வளவு கற்றுக்கொள்கிறீர்களோ, அதே அளவு தோல்வியிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்" என்றார்.

2007-ல் தனது 25 வயதில் `சாவரியா' படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வளர்ந்திருக்கும் ரன்பீர் கபூர், தற்போது இந்தியாவில் அதிக பட்ஜெட் படமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் `ராமாயணா' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் நெப்போட்டிசம் குறித்த உங்களின் பார்வையை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

அமிதாப்பச்சனின் 83வது பிறந்தநாள்; டாட்டூ, டிசர்ட், கேக்குடன் வீட்டிற்கு வந்த அமிதாப் ரசிகர்கள்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு இன்று 83வது பிறந்தநாளாகும். ஒவ்வொரு பிறந்தநாளையும் அமிதாப்பச்சன் மிகவும் வித்தியாசமாகக் கொண்டாடுவது வழக்கம். அவரது ரசிகர்கள் முதல் நாள் இரவில் இருந்தே அமிதாப்பச்சன் வ... மேலும் பார்க்க

The Ba***ds of Bollywood Series: "உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டது" - ஷாருக்கானின் மகன் விளக்கம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் முதல் முறையாக The Ba***ds of Bollywood என்ற பெயரில் புதிய வெப் சீரியஸ் தயாரித்து அதனை நெட்பிளிக்ஸ்ஒ.டி.டிதளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு மக்கள் மத்தியில... மேலும் பார்க்க

``ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை; ஆனால்'' - பாலிவுட் குறித்து தீபிகா படுகோனே

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே குழந்தை பிறந்த பிறகு படப்பிடிப்புக்கு வர சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது. 8 மணி நேரம் தான் பணியாற்றுவேன் என்று கூறியதாக தெரிகிறது. இந்த நிபந்தனையால் சில முக்கியம... மேலும் பார்க்க

அபுதாபி சுற்றுலா விளம்பரம்: தீபிகா படுகோனே ஆடை மீதான ட்ரோல்களும் ரசிகர்களின் ஆதரவும்; பின்னணி என்ன?

சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர சிங்குடன் அபுதாபி சுற்றுலா விளம்பரத் தூதராகச் சேர்ந்தார். அவர் விளம்பர தூதராகச் சேர்ந்தவுடன் அவர் அபுதாபியில் உள்ள சுற்றுலா தலங்களைப் பார்வைய... மேலும் பார்க்க

"கரிஷ்மா கபூரின் திருமண வாழ்க்கையை பிரியா அழித்தார்" - சஞ்சய் கபூர் சகோதரி புகாரின் பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சஞ்சய் கபூர் நடிகை கரிஷ்மா கபூரை விவாகரத்து செய்துவிட்டு பிரியா சச்சி... மேலும் பார்க்க

சைபர் குற்றம்: "ஆன்லைனில் கேம் விளையாடிய என் மகளிடம் நிர்வாண போட்டோ கேட்டனர்" - அக்‌ஷய் குமார் வேதனை

நாடு முழுவதும் சைபர் கிரிமினல் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் மக்கள் சைபர் கிரிமினல்களிடம் பணத்தை இழப... மேலும் பார்க்க