செய்திகள் :

அபுதாபி சுற்றுலா விளம்பரம்: தீபிகா படுகோனே ஆடை மீதான ட்ரோல்களும் ரசிகர்களின் ஆதரவும்; பின்னணி என்ன?

post image

சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர சிங்குடன் அபுதாபி சுற்றுலா விளம்பரத் தூதராகச் சேர்ந்தார். அவர் விளம்பர தூதராகச் சேர்ந்தவுடன் அவர் அபுதாபியில் உள்ள சுற்றுலா தலங்களைப் பார்வையிடுவது போன்ற ஒரு விளம்பர வீடியோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஆரம்பத்தில் இருவரும் அபுதாபியில் உள்ள பழமையான Louvre Abu மியூசியத்தைச் சுற்றிப் பார்த்தபடி அதன் அற்புதங்கள் குறித்துப் பேசிக்கொள்வர். இருவரும் வழக்கமான வெஸ்டர்ன் ஆடைகளை அணிந்திருந்தனர்.

அதன் பிறகு இருவரும் ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்குச் செல்வர். அங்குச் செல்லும்போது தீபிகா படுகோனே தனது உடல் முழுவதையும் மறைத்து முகம் மட்டும் தெரியும் வகையில் உடை அணிந்து இருந்தார். அவர் தலையைக்கூட மறைத்திருந்தார்.

இது போன்ற ஆடையுடன் அவர்கள் விளம்பர வீடியோவில் நடித்திருந்தனர். இந்த வீடியோ வெளியானவுடன் சமூக வலைத்தளப் பக்கத்தில் தீபிகா படுகோனேயை ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

தீபிகா படுகோனே-ரன்வீர் சிங்
தீபிகா படுகோனே-ரன்வீர் சிங்

தீபிகா படுகோனே ஹிஜாப் அணிந்திருப்பதாக சிலர் விமர்சனம் செய்தனர். அதேசமயம் தீபிகா படுகோனேயின் ரசிகர்கள் தீபிகா படுகோனேயின் செயலை நியாயப்படுத்தி இருக்கின்றனர்.

தீபிகா படுகோனே கலாசாரத்திற்கு மதிப்பு கொடுப்பவர் என்றும், அபுதாபி சுற்றுலா விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு நடித்து இருப்பதாகவும், ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்கு வரும் அனைத்து பெண்களும் இது போன்று உடை அணியவேண்டும் என்றும் தங்களது பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு திருமண நாள், குழந்தை பிறந்தது உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் தீபிகா படுகோனேயும், அவரது கணவரும் பல கோயில்களுக்குச் சென்று வந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளனர். பலர் தீபிகா படுகோனேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2019ஆம் ஆண்டு தங்களது முதல் திருமண நாளைக் கொண்டாட இருவரும் பஞ்சாபில் உள்ள பொற்கோயில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் சென்று வந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றபோது தீபிகா படுகோனே காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்திருந்தார். இருவருக்கும் குழந்தை பிறக்கும் முன்பு மும்பையில் உள்ள சித்தி விநாயக் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.

"கரிஷ்மா கபூரின் திருமண வாழ்க்கையை பிரியா அழித்தார்" - சஞ்சய் கபூர் சகோதரி புகாரின் பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சஞ்சய் கபூர் நடிகை கரிஷ்மா கபூரை விவாகரத்து செய்துவிட்டு பிரியா சச்சி... மேலும் பார்க்க

சைபர் குற்றம்: "ஆன்லைனில் கேம் விளையாடிய என் மகளிடம் நிர்வாண போட்டோ கேட்டனர்" - அக்‌ஷய் குமார் வேதனை

நாடு முழுவதும் சைபர் கிரிமினல் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் மக்கள் சைபர் கிரிமினல்களிடம் பணத்தை இழப... மேலும் பார்க்க

AI, DeepFake வீடியோக்கள் வெளியிட்ட யூடியூப் சானல்கள்; ரூ.4 கோடி கேட்டு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் வழக்கு

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களது புகைப்படம், பெயர் மற்றும் வீடியோக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்... மேலும் பார்க்க

Asha Bhosle: `ஆஷா போஸ்லே குரலைப் பயன்படுத்த தடை' - மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறுஉருவாக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் பாட... மேலும் பார்க்க

உலகின் பணக்கார நடிகரான ஷாருக் கான் - பின்னுக்குத் தள்ளப்பட்ட நடிகர்கள்

உலக பணக்காரர்கள் பற்றிய விபரத்தை ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக நடிகர் ஷாருக்கான் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்த... மேலும் பார்க்க

Akshay Kumar: "20 ஆண்டுகளாக மாலை 6.30 மணிக்குப் பிறகு உண்பதில்லை" - அக்‌ஷய் குமாரின் டயட் ப்ளான்

சமீபத்தில் திரையுலகில் 38 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அக்‌ஷய் குமார், தனது தொழிலில் இவ்வளவு நாட்கள் வெற்றியுடன் இருப்பதற்கு உதவிய தனது பழக்க வழக்கங்கள் பற்றி மனம் திறந்துப் பேசியிருக்கிறார். நடிகர் அ... மேலும் பார்க்க