செய்திகள் :

பட்ஜெட்டைத் தாண்டாமல் தீபாவளி ஷாப்பிங் செய்ய வேண்டுமா? சூப்பர் 7 டிப்ஸ் இதோ!

post image

தீபாவளி ஷாப்பிங்கை தொடங்கிவிட்டீர்களா? ஷாப்பிங் பில் எகிறிவிடாமல், பட்ஜெட்டிற்குள்ளேயே இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம் வாங்க,

1. ஷாப்பிங் செல்வதற்கு முன்பு, என்னென்ன வாங்க வேண்டும் என்பதை முதலிலேயே லிஸ்ட் போட்டு பிளான் செய்துகொள்ளுங்கள். அதை மட்டும் ஃபோக்கஸ் செய்து சென்றால், எக்ஸ்ட்ரா எதையும் ஷாப்பிங் செய்யமாட்டீர்கள்.

2. 'அதுதான் லிஸ்ட் போட்டுட்டோமே' என்று அசால்டாக தோன்றியதை எல்லாம் ஷாப்பிங் செய்யக்கூடாது. லிஸ்ட் போட்டதை மட்டும் பக்காவாக ஷாப்பிங் செய்ய வேண்டும். அதற்குமேல், தேவையில்லாதவற்றை வாங்காதீர்கள்.

தீபாவளி ஷாப்பிங் செய்ய 7 டிப்ஸ்
தீபாவளி ஷாப்பிங் செய்ய 7 டிப்ஸ்

3. கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது, குறிப்பிட்ட கடைகளில் 'ஷாப்பிங் கார்டு' என்கிற ஆப்ஷன் இருக்கும். அந்தக் கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும்போது, சில தள்ளுபடிகள் கிடைக்கும். அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

4. அதுபோல கிரெடிட் கார்டுகள், சில வங்கிகளின் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போதும், தள்ளுபடிகள் கிடைக்கும். அதையும் கேட்டுப்பாருங்கள்.

5. ஒரு கடைக்குள் நுழைந்ததும், சலுகைகள், தள்ளுபடிகள் என ஏகப்பட்ட கார்டுகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த இடங்களில் பொருள்களை வாங்கும்போது சற்று கவனமாக இருங்கள்.

ஆர்வத்தில் பொருள்களைத் தேடிக்கொண்டிருக்கும்போது, அப்படியே அந்த ஆஃபர் இடங்களில் இருந்து தள்ளிப்போக நேரிடும். தெரியாத்தனமாக, ஆஃபர் இல்லாத பொருளை வாங்கிவிட்டு, பில் போட்டு வெளியே வந்ததும் தான் அதைக் கவனிப்போம். அதனால், அங்கே கவனம் தேவை.

ஷாப்பிங் மால்
ஷாப்பிங் மால்

6. உங்களுக்கு தேவையான பொருள்கள் இருக்கும் இடத்தைத் தாண்டி, முடிந்தவரை வேறு எங்கும் செல்லாதீர்கள். அப்படி செல்லும்போது, வேறு ஏதாவது பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றும். அப்போது பட்ஜெட்டை தாண்டி செலவு எகிறக்கூடும்.

7. தள்ளுபடி, சலுகையில் கிடைக்கிறது என்று தேவையில்லாததையும் வாங்கி குவிக்காதீர்கள். தேவையானவற்றை மட்டும் சரியாக, கவனமாக வாங்குங்கள். ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் ஆஃபர்கள் வரும். அப்போது தேவையென்றால் வாங்கிக்கொள்ளலாம் என்பதில் தெளிவாக இருங்கள்.