செய்திகள் :

ஒரே நாளில் 47 மீனவர்கள் சிறை பிடிப்பு; இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை- மீனவர்கள் அதிர்ச்சி!

post image

ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி நாகப்பட்டினம் வரை உள்ள 6 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக வங்க கடலில் உள்ள பாக் நீரிணை பகுதியே அவர்களின் வாழ்வாதர தளமாக இருந்து வருகிறது. அதை நம்பியே பாக் நீரிணை பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு தமிழக மீனவர்களை குறிவைத்து தங்கள் தாக்குதல்களையும் சிறைபிடிப்புகளையும் தொடர்ந்து வருகின்றனர் இலங்கை கடற்படையினர்.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 339 விசைப்படகுகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் வழக்கமாக மீன்பிடிப்பில் ஈடுபடும் பாரம்பரிய கடல் பகுதிகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் ரோந்து கப்பல் மூலம் சுற்றி வளைத்தனர். இதனை கண்ட தமிழக மீனவர்கள் தங்கள் படகுகளுடன் அப்பகுதியில் இருந்து தப்ப முயன்றனர்.

சிறை பிடிக்கப்பட்ட படகு
கைதான மீனவர்கள்

ஆன போதும் இலங்கை கடற்படையினர் தப்ப முயன்ற படகுகளையும் அதில் இருந்த மீனவர்களையும் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், தங்கச்சிமடம் ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்கு சொந்தமான 4 விசை படகுகளையும் அதில் மீன்பிடிக்க சென்ற 30 மீனவர்களையும் சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க சென்று பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒரு விசைப்படகினையும் 17 மீனவர்களையும் இலங்கை கடற்படையின்ர் சிறை பிடித்து சென்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதலும் நடத்தியும் உள்ளனர். இலங்கை கடற்படையினர் ஒரே நாளில் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 47 மீனவர்களை சிறை பிடித்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட படகு

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கும் இலங்கை அரசு, பிடிபடும் மீனவர்களுக்கும் கோடி கணக்கான ரூபாய் மதிப்பில் அபராதம் விதித்து வருகிறது. இந்த அபராத தொகையினை கட்ட முடியாத மீனவர்கள் ஆண்டு கணக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனால் அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினர் தங்கள் உறவுகளையும், வாழ்வாதாரமாக உள்ள படகுகளையும் இழந்து தவிக்கின்றனர்.

மீனவர்கள் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதும், அவர்களை மீட்டுத்தர கோரி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயலாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், மீன் ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலவாணியும் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதுடன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம்: கோயிலுக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 75 வயது அர்ச்சகர் போக்சோவில் கைது!

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்-மின்வாரிய ஆய்வாளரைக் கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை; விவரம் என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயகுமார் (56). இவரிடம் தாராபுரத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `அடிக்கடி குரைக்கின்றன'- குடிபோதையில் நாயை கல்லால் தாக்கிக் கொன்ற வாலிபர்!

துாத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் இரண்டு நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் இரண்டு நாய்களையும் வீட்டின் முன் சங்கிலியால் கட்டி போட்டி... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பெண் குழந்தையைக் கடத்த முயற்சி? வடமாநில நபரைக் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள சின்னமோட்டூர் கிராமத்தில், வடமாநில நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்திருக்கிறார். திடீரென அந்த நபர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த தம்பிதுரை ... மேலும் பார்க்க

மது விருந்தில் தகராறு: பாலிவுட் நடிகர் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நண்பர்

பாலிவுட்டில் ஜுண்ட் என்ற படம் உட்பட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் பாபு செத்ரி என்ற பிரியன்ஷு க்ஷத்ரியா(21). மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பாபு செத்ரி நேற்று தனது நண்பர் துரு ஷா என்பவருடன்... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான பிரபல `கூலிப்படைத் தலைவன்’ மரணம் - நாகு என்கிற நாகேந்திரனின் பின்னணி

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் நாகு என்கிற நாகேந்திரன். இவர் சிறுவயது முதலே பாக்ஸராக வேண்டும் என்ற கனவோடு வலம்வந்தவர். அதனால் வடசென்னையிலுள்ள பாக்ஸிங் கோச்சிங்கில் சேர்ந்தார். அங்கே விஜி என்ற பாக்... மேலும் பார்க்க