உலகின் 8வது உயரமான சிகரத்தில் கால் வைத்த இந்தியர்; கின்னஸ் உலக சாதனை படைப்பாரா?
கும்பகோணம்: கோயிலுக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 75 வயது அர்ச்சகர் போக்சோவில் கைது!
கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர். இக்கோயில் குடமுழுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனாலும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 8ம் தேதி பாபநாசம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இரவு சுமார் 7 மணியளவில் சாமி தரிசனம் செய்வதற்கு கோயிலுக்கு சென்றனர். இதில் அந்த குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரும் உடன் சென்றார். கருவறையில் சாமி தரிசனம் செய்தபோது கோயில் அர்ச்சகர் விஸ்வநாதன் (75) தீபாராதனை காட்டி திருநீர் கொடுத்துள்ளார். அப்போது சிறுமி தன் கையில் வைத்திருந்த பேக்கை வைத்துவிட்டு தரிசனம் செய்துள்ளார்.
பின்னர் அப்படியே பேக்கை மறந்து விட்டு கோயில் வளாகத்திற்கு வந்து விட்டார். குடும்பத்தினருடன் வலம் வந்த சிறுமி உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக பார்த்த போது பேக்கை மறந்து விட்டு வந்தது தெரிந்துள்ளது. உடனே பெற்றோரிடம் சொல்லி விட்டு எடுக்க சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாததால் சிறுமிக்கு அர்ச்சகர் விஸ்வநாதன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்கிறார்கள். இது பேட் டச் என்று அர்ச்சகரை கையை தள்ளி விட்டு அங்கிருந்து அழுது கொண்டே ஓடிய சிறுமி பெற்றோரிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார்.
இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் விஸ்வநாதன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் வயது மூப்பு காரணமாக அவர் ஜாமீனில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Rai வயது மூப்புகாரணமாக ஜாமினில் வெளியே விட்டதாக விபரம் அறிந்த தரப்பில் தெரிவித்தனர்.