கரூர் மரணங்கள்: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது சிறப்பு புல...
தூத்துக்குடி: `அடிக்கடி குரைக்கின்றன'- குடிபோதையில் நாயை கல்லால் தாக்கிக் கொன்ற வாலிபர்!
துாத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் இரண்டு நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் இரண்டு நாய்களையும் வீட்டின் முன் சங்கிலியால் கட்டி போட்டிருப்பாராம். அந்த வழியாக யாரேனும் சென்றால் நாய்கள் குரைப்பது வழக்கம். இந்த நிலையில், பக்கத்து வீட்டை சேர்ந்த மாரிசெல்வம், என்பவர் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் மாரியப்பன் வளர்த்து வரும் நாய்கள் அவரை பார்த்து குரைத்துள்ளன.

இதுதொடர்பாக பல முறை இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை மதுபோதையில் அந்த வழியாக சென்ற மாரிசெல்வத்தை பார்த்து இரண்டு நாய்களும் குரைத்துள்ளன. ஆத்திரமடைந்த மாரிசெல்வம் அங்கு கிடந்த ஹாலோ பிளாக் கற்களால் இரண்டு நாய்களையும் கடுமையாக தாக்கி உள்ளார்.
இதில், ஆண் நாய் சம்பவ இடத்திலேயே இறந்தது. பெண் நாயின் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாரியப்பன் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும், அவர் கற்களால் நாய்களை தாக்குவதை மொபைல்போனில் வீடியோ எடுத்து ப்ளுகிராஸ் அமைப்பினருக்கும் அனுப்பி உள்ளார். இதனையடுத்து, சிப்காட் காவல் நிலைய போலீஸார், மாரிசெல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தினர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

காயமடைந்த பெண் நாயை மீட்ட ப்ளுகிராஸ் அமைப்பினர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து கவனித்து வருகின்றனர். மாரிசெல்வம் கற்களால் நாய்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.