செய்திகள் :

பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களை உணவுகளுக்கு வைத்து சாப்பிட்ட இந்திய விமானப்படை - மெனு வைரல்!

post image

இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு விழாவில் வழங்கப்பட்ட இரவு விருந்தின் மெனு வைரலாகி வருகிறது. வழக்கமான விருந்து உணவுகள் என்றால் அதற்கு வித்தியாசமாக பெயரிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இந்த விருந்து எந்த இடத்தில் நடைபெற்றது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள புகைப்படங்களின்படி, விமானப்படை ஆண்டுவிழாவைச் சேர்ந்தவை என்பது தெளிவாகிறது. இந்த பட்டியலை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

IAF 93

கடந்த மே மாதம் 7ம் தேதி பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை குறிவைத்த பாகிஸ்தான் பகுதிகளின் பெயர்களை உணவுகளுக்கும் வைத்துள்ளனர்.

இந்திய விமானப்படை அக்டோபர் 8, 1932ல் உருவாக்கப்பட்டது. இதை முன்னிட்டு பல விமானப்படைத் தளங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த மெனுவில்,

இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகள் எனத் தலைப்பிட்டு 'தவறில்லாதது, ஊடுருவ முடியாதது மற்றும் துல்லியமானது' என எழுதப்பட்டிருந்தது.

உணவுகள்

ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா

ரஃபிக்கி ரஹாரா மட்டன்

பொலாரி பனீர் மேத்தி மலாய்

சுக்குர் ஷாம் சவேரா கோஃப்தா

சர்கோதா தால் மக்கானி

ஜகோபாபாத் மேவா புலாவ்

பஹவல்பூர் நான்

இனிப்புகள்

பாலகோட் டிராமிசு

முசாஃபராபாத் குல்ஃபி பலுதா

முறிக்கே மீதா பண்

இதிலுள்ள ராவல்பிண்டி, பாலகோட், பஹவல்பூர், முசாபராபாத், முரிட்கே ஆகிய நகரங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவை. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இங்குள்ள தீவிரவாத/ராணுவ தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலில் இரண்டு நாடுகளும் தாங்கள் வெற்றிபெற்றதாக அறிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டும் பரப்புரை மேற்கொண்டும் வருகின்றன. அத்துடன் இதில் அமெரிக்கா தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறிவருவதும் சர்சையை ஏற்படுத்தியிருந்தது.

பி.ஆர் கவாய்: "அதிர்ச்சிக்கு உள்ளானோம்" - காலணி வீசிய சம்பவம் குறித்து நீதிபதி சொல்வதென்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த அக்டோபர் 6 (திங்கட்கிழமை) வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியது. அது தனக்கு மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் முதல் முறையாக போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் ஜன் சூரஜ் என்ற கட்சியை தொடங்கி தேர்தல... மேலும் பார்க்க

தாலிபன்: இந்தியாவில் ஆப்கன் அமைச்சர்; கொடியில் குழப்பம் - வருகையின் பின்னணி என்ன?

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபன் அமைச்சர் அமிர் கான் முத்தாகி டெல்லி வந்தடைந்துள்ளது பிராந்திய அரசியலில் முக்கியமான தருணமாக பார்ப்படுகிறது. ஐநாவின் பாதுகாப்பு கவ... மேலும் பார்க்க

`ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்காக ரூ.100 கோடியில் திட்டம்’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் சர்வதேச மாநாடு கோவை கொடிசியா வர்த்தக வளாத்தில் நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில... மேலும் பார்க்க

கோவை சிட்டி டு விமான நிலையம் இனி 10 நிமிடங்கள் தான்! - திறக்கப்பட்டது அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்ச... மேலும் பார்க்க

ஜி.டி.நாயுடு: கோவை அவிநாசி சாலை மேம்பாலம் பெயர் சர்ச்சை - அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் கெட்டிக்காரர் என முதலமைச்சர் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார். முதல... மேலும் பார்க்க